பக்கம்:அலைகள்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


184 இ லா. ச. ராமாமிருதம்

விடும்போல் உப்பும் குழந்தை முகத்தைக் காணச் சகிக்காது, என் கண்கள் தாமே மூடிக்கொள்கின்றன.

கண்ணைத் திறந்தால் டாக்டரின் பையன் கிங்கரன். எதிரே நிற்கிறான். (அவன் பெயர் சங்கரன்.)

டாக்டரின் பைகன் - அவனேதான் அவருடைய


க்ளீனர்; தோட்டக்காரன்: கம்பவுண்டர்; பில் கலெக்டர்.

டாக்டர் நல்லவர். பையன் பொல்லாதவன். அதனால்தான் டாக்டர் பையனை அனுப்புகிறார். பாக்கியைக் கேட்பவன் பொல்லாதவனானால், டாக்ட ரின் பையன் ரொம்ப ரொம்பப் பொல்லாதவன்.

ஏனெனில் நான் ரொம்ப ரொம்ப ரொம்பப் பாக்கி! ரமணியைப் பெற்ற பாக்கியை அவர் பையன்மூலம் கேட்டுக் கேட்டு விட்டொழித்தாரே ஒழிய, நான் கொடுத்து ஒழிக்கவில்லை.

ரமணியைப் பெற்றபோது ஸ்ைந்தவி புதுப் பிறப்பாய்த் தான் மீண்டாள். சமயத்தில் ஏதேதோ கோளாறு.

ஆஸ்பத்திரியில் மறுநாள்தான் என்னைப் பார்க்கவிட் டார்கள். குஹை விழுந்து சப்பிப்போன அவ்வுடலையும், மூடிய இமைகளின்மேல் பஞ்சு படர்ந்திருந்த லோக அசதி யையும் பார்க்கப் பகீரென்றது.

ஸ்ைந்தவீ! (என் குரல்தானா?) இளைத்து, சீவனற்று போர்வைக்கு வெளியே கிடந்த கைமேல் என் கையைப் பொத்தினேன்.

கண் திறக்கவில்லை. இரு கண்ணிர்த்துளிகள் விழி யோரங்களில் நடுங்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/186&oldid=666943" இருந்து மீள்விக்கப்பட்டது