பக்கம்:அலைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வித்தும் வேரும் O 189


மாலையின் மங்கலில், தோரணம் தோரணமாய் இறங்கும் இரவின் நிழலில், கண் திறந்ததும் தெரிந்தது உன் நெற்றி மையத்தினின்று சரிந்த இருள் வீழ்ச்சிகள், சட்டமிட்ட முகத்தில் ஏற்றிவைத்த சிமிழ் விளக்குகள். உன் விழிகளின் ஒளியில், உன் நெற்றியில், உன் வெற்றியின் வர்ணக் கொடிபோல், ஒன்றன்கீழ் ஒன்றாய், தகடு தகடாய்,

குங்குமம்
விபூதி
மை

என் முகத்தில் உன் மூச்சு.

“மை நன்னாயிருக்கா? ஒத்தருக்கும் தெரியாமல் புதுசா வெச்சேன்."

(அப்போ கள்ளி நீயா நானா?)

தந்திகளின் தன் மீட்டல் போலும் உன் வார்த்தைகள் இருளில் எங்கிருந்தோ மிதந்து வந்தன.

உன் குங்குமத்தின் சிவப்பில் தழலானேன்.

உதிரி விபூதியின் வெண்மையில் நீறானேன்.

உன் மை வைத்த இருளுடன் இரவின் கலவையில் இருவரும் நம்மையிழந்தோம். வேளையின் புன்னகையில், சமயத்தின் சிறப்பிற்கு இருவரும் சரணமானோம்.

இத்தனையும் உன்னிடம் சொல்லப் போனால் உனக்கு எவ்வளவு புரியும்? எனக்கேதான் எவ்வளவு புரியும்? நாமே புரியவா இருக்கிறோம்? புரிந்துவிட்டால் பிறகு சொல்லவே தான் என்ன இருக்கிறது? சொன்னால், சொல்லின் சிதைவு பட்டு, உண்மை பொய்யாகி விடுகிறது. ஆகையால், புரிந்த துடன் புரியாததையும் ஏற்றுக்கொண்டு, அத்தனையும் உள் ளேயே வைத்துக்கொண்டு எல்லோரிடமும் இடிபட்டுக்-

திடீரென ப்ரேக்குகளின் “க்றீச்” முரட்டுத்தனமாய் என் சிந்தனையினின்று என்னை உலுப்பிற்று. தெருவில் ஒரே ஆரவாரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/191&oldid=1290269" இலிருந்து மீள்விக்கப்பட்டது