வித்தும் வேறாம் இ 191
அம்மாவின் குரல் கீழிருந்து மேலே எட்டிற்று. பாவம்! அசதி, நேற்றுப் பிற்பகல் கெடுபிடியிலிருந்து அவளுக்கு ஒயாத அலைச்சல், கவலை, காரியம்.
ரமணி தன் நினைவிலாது படுக்கையில் ஓயாமல் புரள் கிறான். ஜ்வரத்தில் குழந்தை நெருப்பாய் ஜ்வலிக்கிறான். இப்போது தான் சற்று நேரமாய் அயட்டல் சற்று அடங்கியிருக்கிறது. -
ஒரு இலைகூட அசையவில்லை. எனக்கு முச்சு திணறிற்று, மூச்சுக்குக்கூடக் காற்று இல்லை. எழுந்து சென்று அறைக்குப் பின் இருக்கும் மொட்டைமாடியில் நின்றேன். பக்கத்துக் கொல்லையிலிருந்து. எங்கள் வீட்டுப் பக்கமாய்ச் சாய்ந்த தென்னையில் மட்டைகள், இரைக்குக் காத்திருக்கும் ஒரு ராகrஸ் எட்டுக்கால் அல்ல எத்தனையோ கால் பூச்சிபோல் கவிந்தன.
தூக்கமில்மாமல் எனக்குக் கண்கள், மிளகாய் இழைத் தாற்போல் எரிந்தன. இமைகள் தாமே மூடிக்கொண்டன.
ஸ்ைந்தவி ஆஸ்பத்திரியிலிருந்து வர இன்னும் மூணு நாள் செல்லும், பிறகு உடம்பு உடம்பாவதற்கு ஒரு மாதமேனும் ஆகும்.
(டாக்டர்: “அந்த மட்டுக்கும் போச்சேன்னு கட வுளுக்கு வந்தனம் செலுத்துங்கோ சார், அவங்களுக்குத் திடீர்னு ஷாக்’கில், வேறே காம்ப்ளிகேஷன்” இல்லா up 1**}
“gjakurr!”
அவன் குரலின் அமைதியே குடலைக் குழப்புகின்றது. விழுந்தடித்துக்கொண்டு உள்ளே நுழைகிறேன்.
- golf Isrf'”
‘என்னடா கண்ணு?’’
மலா மலர விழிக்கிறான். ஆனால் இப்போது ஜ்வரத்தினால் அல்ல.