பக்கம்:அலைகள்.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சோம சன்மா

சோம சன்மா என்னும் பிரம்மன் பாறைமீது கால் களை அழுந்த ஊன்றிக் கொண்டு, இளந்தாடி காற்றில் அலைய, கீழே பசிய மரஞ்செடிகள் அடர்ந்திருக்கும் பிரதேசத்தைக் கண்டு அதிசயித்து நின்றான்.

குருகுல வாசத்திலில்லாது, நேரே யோக சித்தியி னின்று விழித்தெழுந்த பால சன்யாசியாதலின், அவன் மண்டையிலும் முகத்திலும் உடலிலும் மயிர் வெட்டாது அடர்ந்து வளர்ந்திருந்தது. மண்டையில் ஊறியிருக்கும் ஞான வெறியோ என்னவோ! சற்று மஞ்சள் பூத்த கண் கள், வீrண்யமாய்ப் பிரகாசித்தன. சமாதியினின்று திடுக்கென்று விழித்தெழுந்ததாலோ என்னனோ, சதா அழிந்து கொண்டும் மறுபடி மலர்ந்து கொண்டு மிருக்கும் இந்தப் பூவுலகின் அழகு, அவனை அப்போதுதான் வயிற்றி லிருந்து விழுந்த குழந்தை போல் பிரமிக்க அடித்தது.

பூமாதேவி, இளவேனிலில் குளித்து, குளித்த சுறுக்கில் பச்சைப் பட்டாடையை உடல்மேல் போர்த்திக் கொண் டிருந்தாள். அவளுடைய அவயவங்களின் வளத்தை எடுத் துக்காட்டி, மரமும் செடியும் கொடியும் பூவும் புதரும் அங்கங்கே பொங்கிப் புள கித்துப் பூத்திருந்தன. வெள்ளிச் சரிகை போல் ஒர் அருவி, பாறைகளினின்று சரிந்து, காட்டி னுள் ஊடுருவிச் சென்றது. ஜலத்தடியில் வெள்ளைக் கூழாங் கற்களும் மணலும் பூமாதேவியின் அடிவயிறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/195&oldid=666962" இருந்து மீள்விக்கப்பட்டது