பக்கம்:அலைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோம சன்மா O 197


-சீ, கேவலம் பெண் புத்தியைக் காண்பித்துவிட்டாள். அதிலும் ஈன ஜாதி, நம் வைராக்கியத்தை மறந்தது நம்மேல் அல்லவா தப்பு? விசுவாமித்திரன் மாதிரி ஏமாந்து போனோம். இது நமக்கு நல்ல பாடம். உன்னையே நீ எண்ணிப் பார்.

அவ்விடத்து மண்ணை உ த றி வி ட் டு, அப்பால் அகன்றான்,

***

தாவரங்கள் சில மலர்ந்தன. சில வாடிக் காய்ந்து கருகியழிந்தன. நீர் இருந்த இடம் வறண்டு உலர்ந்து வெடித்தது. வெடித்த இடம் சுரந்தது, பூத்திருந்தது செத்தது. செத்தது மறுபடியும் வித்து வைத்தது. வாழ்ந்தது, அழிந்தது, பிறந்தது.

காலம் பல கோலமாய்ச் சென்றது. அவன் திகம்பரனாய், தன்னைத் தவிர வேறேதும் சிந்தியாது, காய் கனி இலை சருகுகளைத் தின்று அலைந்தான். அவனது தனித் தவத்தின் விந்தை யாதெனில், மேனி இளைக்கவில்லை, மயிர் சடைத்ததால், உடம்பில் உரம் ஏறி, ஆள் உருவாய் விளங்கினான். நினைத்தபோது ஆகாரம். கண்ட விடத்தில் படுக்கை. தாடி. முழங்கால் வரை தொங்கியது. அதிலிருந்தே அவன் எவ்வளவு பெரிய தவசி என்று அவனுக்கே தெரிந்தது. அவனை அண்ட எதுவும் அஞ்சியது. அவன் மூச்சிலேயே அவ்வளவு அனல் நெடி,

பிறகு, ஒருநாள் காலை, -வில்வ இலைகளை உட் கொண்டு உள்ளத்தில் வீற்றிருக்கும் பெம்மானை அர்ச்சித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று அவனுக்கு உடல் இருப்புக் கொள்ளாமல் பரபரத்தது. யாரோ புதர்களிடையேயிருந்து, தன்னைக் கூர்மையாய்க் கவனிப்பது போன்ற சங்கடமான உணர்ச்சி. வாயில் அப்படியே ஒரு

அ.-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/199&oldid=1290277" இலிருந்து மீள்விக்கப்பட்டது