பக்கம்:அலைகள்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


204 இ லா. ச. ராமாமிருதம்

தாத்தாவை இப்படிப் பேசாவிட்டால் தகாதா? உனக்கு இந்த வயசில் தாத்தாவைப் பார்த்து அசிகையா என்ன?’’

‘ஏன், நான்தான் வெல்லப் பொதியாய் ஆயிட்டேன். அவர் இன்னும் யாருமே அசிகைப்படற மாதிரி தானே யிருக்கார்! ஏன் பேரப் பிள்ளைகள் நீங்களே பாருங்களேன், வரிச்ச கழிமாதிரி நெட்டையா. நெட்டியா அந்த உடலும் கத்திமாதிரி மூக்கும்! இன்னும் அந்த முண்டா பனியன் தெரியணுமாம் அந்த மஸ்லின் ஜிப்பாவைப் பாரேன்! வங்கதான் ஆச்சே, பஞ்சக்கச்சம் வெச்சுக் கட்டிண்டால் பாந்தமாயிருக்காதா? ஜரிகைக்கரைவேஷ்டி தொங்கத் தொங்கப் பாதத்தை மூடி, தரையையும் தெருவையும் பெருக்கியாறது. மயிர்தான் பக்கெட் டக்கெட்டாய் காப்பி குடிச்சு, வெள்ளைக் கத்தாழையா நரைச்சுப் போச்சு. திண்ணையில் உட்காந்திண்டு வர வாளை யும் போற வாளை யும் பார்த்துப் தலை ஆட்டங் கண்டு போச்சு. இதுபோக உங்கள் தாத்தாவுக்கு என்னடாப்பா குறைச் சல்? காசுக்கு ஆசைப்பட்டானும் பெண்ணைக் கொடுக்க வரமட்டாளா? மனுஷனும் நான் இருக்கேனேன்னு பார்க்காட்டா, வந்த பெண்ணை வேண்டாம்னு சொல்லத் தயங்குவாரா?”

ஏலே சிக்காமு என்ன நீ என்னை பழித்தாலும், நீ மட்டும் உன் அலங்காரத்தில் மட்டோ? எல்லாம் இருக்கிறவரைக்கும் தானே’ என்று வழக்குப் பண்ணி உன் நாட்டுப் பெண்களுடன் போட்டி போட்டுக்கொண்டு, தீவளிக்குத் தீவளி பட்டுப் புடவை வாங்கிக் கட்டிக்கொண் டதில் குறைந்தாயோ?

இருக்கிறவரை தின்னூட்டும் போறேன்” ‘இருக்கிறவரை கட்டிக்கறேன்” ‘இருக்கிறவரை பூட்டிக்கறேன்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/206&oldid=666984" இருந்து மீள்விக்கப்பட்டது