பக்கம்:அலைகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் O 205


இது வயதானவர்களுக்கு நல்லதொரு ப்ரம்மாஸ்திரம். ஆனால் துருப் பிடிக்காமல், வயதிலிருந்தே உன்னைப் போல் உபயோகித்தவர் இல்லை.

"இருக்கிற வரைக்கும் தானே? திரும்பி வரேனோயில்லையோ?” என்று பிள்ளைப் பேறுக்குப் பிள்ளைப் பேறு பயமுறுத்திவிட்டு பிறந்தகத்துக்குக் கிளம்புவாய். கையில் குழந்தையை ஏந்திக்கொண்டு புத்தொளிர்வுடன் திரும்பி வருவாய், வண்டியை விட்டிறங்கி, அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்து நமஸ்காரம் பண்ணி வாங்கிக் கொண்டபின், என்னிடம் கொடுக்கையில், உன் முகத்தில் குழப்பம் வெட்கம், மகிழ்ச்சி, சிவப்பு. ஆயிரம் கேள்வி பதில்களுள், பாம்பு போல் நெளிந்து விளையாடும் சந்தேகம் ஒன்று என்னென்று எனக்குத் தெரியும். "இருக்கிற வரைக்கும்" என்று உன் பாஷையில் நீ நட்ட வேலிக்குள், நீ வரும் வரை நான் இருந்தேனோ என்பது தானே!

“நான் இருக்கிற வரையில் என் கண்ணில் மண்ணைத் தூவாதேங்கோ. நான் கண்ணை மூடினப் புறம் என்ன அக்கிரமம் நடந்தாலும் எனக்கென்ன தெரியப் போறது?’’

உன் வழக்கமான ப்ரலாபங்களில் இதுவும் ஒன்று.

உன் சந்தேகத்துக்கும் உனக்கு ஒரு பாஷைதான். ஒவ்வொன்றாய் இவ்வுலகத்துள் நீ கொண்டுவந்த உன் பிள்ளைகளுக்கு நீ இட்ட சட்டத்துக்கும் அதே பாஷை தான்.

நான் இருக்கிறவரைக்கும் உங்களையெல்லாம் ஒண்ணாவே பார்த்துண்டு இருத்துடறேன். நான் கண்ணை மூடினப்புறம் நீங்கள் எப்படிப் புட்டுண்டால் எனக்கென்ன தெரியப் போறது?’’ -

சிக்காமுக்கு என்னவோ ஒன்றும் தெரியாதென்று தான் பெயர். ஆனால் ஒன்றுந் தெரியாதவர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/207&oldid=1285365" இலிருந்து மீள்விக்கப்பட்டது