பக்கம்:அலைகள்.pdf/210

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


208 இ லா. ச. ராமாமிருதம்

“பயப்படாதே குழந்தை. என் உயிர் தானே? போற. நாள் வந்தாச்சே, அதுக்குள் நான் வேறு அவசரப் உடனு:மா?

‘பேச்சென்னவோ நியாயமாத்தான் பேசறே, ஆனால் என் நயினா சொல்லிச்சு, போறவங்க கூட அப்படித்தான் பேசு வாங்களாம் - என்ன சிரிக்கிறே?”

“உன் பேச்சுக்குத்தான்’

‘’ என்ன தாத்தா திடீர்னு அழுவறே, திடீர்னு சிரிக்கறே? நீ இடம்மாத்தி உக்காரு. சுடுகாட்டுலேதான் ஆவி நடமாடுதுன்னு நெனிச்சியா? இங்கே அதுக்கு மேலே தாத்தா! உங்களவங்க எத்தினிபேர் குளிக்க வந்து உள்ளேயே போயிருக்காங்க! எங்கள வங்க பொழுதுக்கு வலையோடே கட்டுமரத்திலே போன வங்க எத்தினிபேர் திரும்பவேயில்லே! அவங்க மனையும் மக்களும் சோத்துப் பானையோடே கரையிலே காத்திருந்து காந்திருந்து குடும்பமே மனலோடு மண்ணா போயிருக்குது எத்தினி! இந்தத் தண்ணியிலே எத்தனை எலும்பு கரைஞ்சிருக்குது தெரியுமா? என் நைனா சொல்விச்சு, உஜாராயிருக் கணும்னு ஓயாமல் அலைபாயுதே சில வங்களுக்கு சில சமயம் அத்தனை கைநீட்டி அவங்களை அழைக்கிற மாதிரியே யிருக்குமாம். உஜாராயிருக்கணும்னு என் நைனா சொல்லியிருக்குது.

• • ! “

“ஆமா, மெய்யாத்தான்! சாவணும்னுங்கற நினைப் பிலே வரக்கூடத் தேவையில்லியாம். இந்த அலை அழைக் கிற அழைப்பிலே சாவு பின்னாலே வந்து களுத்திலே கையைக் கொடுத்துத் தள்ளுமாம்.’

‘நல்லாப் பேசறையே பெண்ணே, உன் பேர் என்ன?”

‘சிக்காமூ -என்ன தாத்தா மாரைப்பிடிச்சுச்சிட்டே? தாத்தா தாத்தா ஒதுங்கு அலைவருது, அலை ஒடிவருது பாஞ்சு வருது!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/210&oldid=666993" இருந்து மீள்விக்கப்பட்டது