பக்கம்:அலைகள்.pdf/213

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அலைகள் இ 211

மோதியுடைந்து, ஸ்படிகச்சிற்கள் உதிர்கின்றன. அவைக னுரடே, வருடங்களின் பின்னணியில் புதைந்துபோன நினை வின் மொத்தமான அரூபம் புகுந்து புறப்படுகையில், ஒளிச் சிதர்களாய் ரூபம் பிரிகின்றது.

மடித்த விசிறி திடீரென விரிந்தாற்போல், பஞ்சவர்ணக்கிளி சிறகு விரித்துப் பறந்தாற்போல் கோடைமழையில் வானவில் வளைந்தாற்போல் காலடியில் மழைத்தேக்கத்தில் ஜாலவர்ணங்கள்

தோய்ந்தாற்போல, சுண்டிய தந்தி தன் விதிர்விதிர்ப்பில் எட்டுத் தந்திகளாய் விசிறினாற்போல், - மந்தர ஸ்தாயியில் குரலின் கனத்த கார்வைபோல் நான் ஒண்டியில்லை எத்தனை எத்தனையோ! சிக்காமூ, நீயும் தனியில்லை. நீயும் அத்தனை அத்தனை. உன் பேர் சிவகாமசுந்தரி, நீ சிவாவாயும் காமுவா யும் சுந்தரியாயும் சிதறிப் போனாய்.

சிவை சிவே, பவே பவீ காமு, காமி, காமினி, காமா, பூமா, ரமா, ஹேமா காமாr, மீனாகூரி, அஞ்சனாகவி, அஞ்சனா, காஞ்சனா சுந்தரி, நிரந்தரி, சுந்தரா, சுந்தா, சுந்து, சுகந்தி... பெயர்கள், பெயர்களின் ஒசை, ஓசைகளின் சாயை, சாயையிலிருந்து மறுபடியும் ததும்பும் பெயர்கள். பெயர் களைத் தாங்கும் உயிர்கள், உயிர்களின் தனித்தனி வாழ்வு களாய்ப் பிரிந்து விட்டாய்.

இத்தனை பேர்களுடன் நானும் தனித்தனிப் பிரிந்து அவரவர்களின் தனித்தனி இயல்புடன் பின்னி இழையோடு கின்றேன்.

சிவகாமூ, உடல் பறக்கிறதடீ! இப்போ என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது? நான் பேசும் பாஷையென்ன? நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/213&oldid=666999" இருந்து மீள்விக்கப்பட்டது