பக்கம்:அலைகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216 O லா. ச. ராமாமிருதம்



"ஷாமி!"

திடுக்கிட்டுத் திரும்புகிறேன். என் வலது பக்கத்தில் இரண்டு குருவிக்காரன்கள் நிற்கிறார்கள். நாள் கணக்கில் குளிக்காமல் உடல்வாடை நேரிடையாய் முகத்திலடித்ததும் வயிற்றைக் குமட்டுகிறது.

இருவர் கழுத்திலும் வரிவரியாய், கறுப்பும் சிவப்பும் வெள்ளையுமாய்ப் பாசிமணி மாலைகள் தொங்குகின்றன. உடம்பிலும் முகத்திலும் மீசையிலும் அழுக்கு காய்ந்து, கறையோடிக் கிடக்கிறது.

"இவன் என் தம்பி. இவன் பெண் சாதி அதோ புள்ளார் கோவிலுக்குப் பின்னாலே மரத்து மறைவுலே இடுப்பைப் புடிச்சுக்கிட்டு, பல்லைக் கடிச்சுக்கிட்டு துடிக்கறா. உன் காலைப புடிச்சுக்கிட்டு கெஞ்சறோம்-" என் கால்மேல் கைவைக்க வருகிறான். விரல்நுனி பாதத்தில் படுகையிலேயே எனக்கு உடல் குலுங்குகிறது. "எங்கள் மானம் நீதான் காப்பாத்தணும். இவன் பெண்சாதி உன் தங்கச்சி மாதிரி. எங்களுக்கு ரொம்ப வேணாம். ஒரு வண்டிச் சத்தம், அவ்வளவு தான். எங்கள் கூட்டத்துலே போய் ஷேர்ந்துட்ட அப்புறம் கவலையில்லே.’’

நான் அவசரமாய் ஜேபியில் துழாவுகிறேன். இரண்டு ரூபாய்கள் தட்டுப்படுகின்றன.

இளையவன் ஊமையாகவே நிற்கிறான். அவன் வேதனை அவனுக்கு வாயடைத்து விட்டது. அண்ணன் கண் தளும்புகிறது. அவனுக்கு என் தகப்பனார் வயது இருக்குமோ?

'ஷாமி', உன் புண்ணியத்தை என்னிக்கும் மறக்கமாட் டேன் உன் ரூவா எங்களுக்குச் ஷும்மா வேணாம். நாங்கள் பிச்சையெடுப்போம். எச்சில் தின்னுவோம். ஆனால் இப்போ உன் துட்டு எங்களுக்கு ஷும்மா வேணாம். இதோஇதோ"- அவசரமாய் ஒரு கறுப்பு மணிமாலையைத் தன் கழுத்திலிருந்து கழற்றி என் கையுள் திணிக்கிறான். "இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/218&oldid=1285557" இலிருந்து மீள்விக்கப்பட்டது