பக்கம்:அலைகள்.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


220 இ லா. ச. ராமாமிருதம்

டால், ஐயே!... அப்பா அம்மாவுக்கென்றே நாமாவளி பாடம் பண்ணியிருந்தார். இருவருக்கும் சச்சரவின்போே அர்ச்சனை நடக்கும்.

சண்டி

சிகண்டி

லண்டி

லவண்டி

ரூட பயங்கரி

கோப ரூபிணி

சாபோத்பவி

மஹிஷா சூரி

அல்ப மயி

ஆrே பணி

அபஸ்மாரி

கனகதுர்க்கா (அம்மா பெயர் கனகம்)

துர்க்குனி

துன் மதி

துர்முகி

துராங்காரி

இதே ரீதியில் இன்னும் ஏதேதோ.

ஆனால் அம்மா ஆயிரம் வசை பாடியும், அப்பா அம்மாவை அர்ச்சித்தும், அத்தைக்கு இன்னும் வேளை வரவில்லை.

அப்பாவுக்குக் கலியாணமாகு முன்னரே, பாட்டி இறந்துவிட்டாள். அத்தை அப்பாவின் பொறுப்பாகி விட்டாள். அம்மா வரும் வரை அத்தை அப்பாவின் ஆசை அங்கச்சி. அம்மா வந்ததும், அம்மா வீட்டின் சட்டக்காரியாகி விட்டாள். அம்மா வீட்டுக்கு வருகையில் அத்தைக்குப் பத்து வயது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/222&oldid=667017" இருந்து மீள்விக்கப்பட்டது