பக்கம்:அலைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் O 221


தேள் கொட்டிப் பாத்திரமே ஒட்டையாகி விடும் என்பார்கள்.

அத்தை என்னதான் பருவமானாலும் மனுஷிதானே! வற்றா ஊற்றாயிருந்த அந்தச் சிரிப்பும் வேடிக்கையும் சுண்ட ஆரம்பித்து விட்டது.

ஆனால் அத்தைக்கு வேளை இன்னும் வரவில்லை.

ஒரு நாள் அத்தை கோயிலுக்குப் போய்வருகையில், காலடியில் ஏதோ இடறிற்று. செம்புழுதி படிந்து, அந்தி வெளிச்சத்தில், கிராவல் கல் மாதிரியிருந்தது. கையில் எடுத்தால், தாமிரத்தில், சுமார் மூன்றங்குல உயரம் கிருஷ்ண விக்ரஹம். புல்லாங் குழலை அபினயம் பிடித்த கைகள்,

கண்ணன் உரு கிடைத்ததையே அத்தை ஒரு சூசகமாகக் கொண்டாள். அல்லது கொள்ள முயன்றாள் என் கட்டுமா? அதை என்னவோ தானே தனியாய்ப் பூஜிப்பதும், அதனெதிரே உட்கார்ந்து அடிக்கடி சிந்தனையில் ஆழ்வதுமானாள். தானாய் நேராததை, அல்ல நேர மறுத்ததை, தன் எண்ணத்தின் வலிமையால், நேர வைக்க முயன்றாள் போலிருந்தது. ஆனால் இப்பொழுது புரிகின்றது. எண்ணம் பலிதமானால், தான் பலிதமாகும் குறிகளாவது முன் தெரிந்தால் தான், வலிமையுடன் வலிமை கூடும், வலிமைக்கு ஊட்டம் வலிமைதான்.

ஆனாலும் வேளை வரவில்லை.

வேளையை நேர வைக்க, அவள் கூட்டும் வலிமையிலே அவள் உள்முறிந்தாள். அவளை மூட்டம் மேலும் சூழ்ந்து கொண்டது.

அத்தைக்கு உடலிலேயே ஒரு அசதி கண்டு விட்டது. மணிக் கணக்கில் ஜன்னலண்டை உட்கார்ந்திருப்பாள். அம்மாவின் கரிப்புகூட அவளைத் தார்க்குச்சி போட்டு: எழுப்ப முடியவில்லை. தேன்குழல் நாழியைத் திருப்பிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/223&oldid=1285648" இலிருந்து மீள்விக்கப்பட்டது