பக்கம்:அலைகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் O 225


தலைமேல் ஓயாது விசிறி சுற்றுகிறது.

அவுன்ஸ் கிளாஸில் கிறுகிறுவென ஏறும் சிவப்பு மருந்தின் 'கிளுக் கிளுக்’.

பிறகு மூச்சின் திருகல் தன் சுழற்படிக்கட்டின் வழியே தன் இருள் கிடங்குகளுள் என்னை எங்கோ கொண்டு போய் விடுகிறது.

O

ளி மறுபடி நினைவில் மலர்கையில், இமையுள் நீலத்தின் மேல் ரோஜா படர்கின்றது. கண் விழிக்கிறேன்.

அம்மா அப்போதுதான் குத்து விளக்கைச் சேவித்து எழுகிறாள். புன்னகை புரிந்தபடி என்னிடம் வருகிறாள்.

"மாதவா, கண்ணைத் திறந்தாயா? என் வயிற்றில் பாலை வார்த்தாயா?”

அவள் கண்களில் ஸ்படிகம் பளபளக்கிறது.

கூடத்தில் மெல்லிய காற்று அவசரமாய் நுழைகிறது. கொடியில் உலர்த்திய துணிகள் அசைகின்றன. அம்மாவின் பார்வை கவலையுடன் குத்துவிளக்கின்மேல் பாய்கிறது. சுடர் சொடசொடக்கின்றது. விளக்கின் கொண்டையில் சொருகிய பூச்சரத்தினின்று ஒரு சாமந்தி விளக்கின் பாதத்தில் உதிர்கினறது. அம்மாவுக்கு ரோமாஞ்சலியில் உடல் குலுங்குகிறது. நின்ற விடத்திலேயே விழுந்து விழுந்து நமஸ்கரிக்கிறாள்.

"அவள் விளக்கிலேயே வந்திருக்காடா!’

நெக்குருகி விக்கி விக்கி அழுகிறாள்.

எவள் வந்திருக்கிறாள்? சுற்றுமுற்றும் பார்க்கிறேன். எனக்கு யாரும் தெரியவில்லையே! எனக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அந்த எண்ணத்தின் அசதியிலேயே தூக்கம் வருகிறது. என் கண்ணிமைகளை யாரோ மூடுகிறாப்போல் இருக்கிறது. என்மேல் போராய்க் குவிந்த நீல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/227&oldid=1285657" இலிருந்து மீள்விக்கப்பட்டது