பக்கம்:அலைகள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தபஸ் இ 21
 

 ஒரே கலவரம், அவன் பக்கமாய்ப் பத்துபேர் ஒடுகின்றனர். பலபேர் கத்திக்கொண்டு வெளியே ஒடுகின்றனர், என்னை நோக்கிப் பத்தாயிரம்பேர் ஓடிவந்து என் மேல் விழுகின்றனர்.

நான் இறந்து போனேன்...

***

நான் எங்கு போகிறேன் என்று எனக்குத் தெரிய வில்லை. ஏதோ சுழல் என்னை வெகு வேகமாய் இழுத்துச் செல்கிறது. ஒரு சமயம் ஒரே பாதாளம், ஒரு சமயம் ஒரே ஆகாயம், கடல்கள், மலைகள், மேகங்கள்...

திடீரென்று என்னைச் சுற்றிலும் ஒரே வெண்மை. ஆட்டு ரோமம்போல், தூய, மிருதுவான வெண்மை.

நான் கைலைக்கு வந்திருக்கிறேன். மலைமேல் சுவாமி. வெகு வேகமாய் நான் மேலே மிதந்து செல்கிறேன். லிங்கத்துக்கெதிரில் என்னை ஏதோ நிறுத்துகிறது. என்னால் அசைய முடியவில்லை, அசைக்க முடியவில்லை.

மலைபோன்ற லிங்கத்தைத் தேவி ஆலிங்கனம் பண்ணிக் கொண்டு இருக்கிறாள். என் அம்பாள்.

"அம்பா...!"

அவளிடம் என் கைகளை நீட்ட முயல்கிறேன். முடியவில்லை.

ஆனால் அவள் முகத்தில் கனிவில்லை. அதில் நான் காணும் கோபமும் கொடூரமும் என்னைத் திடுக்கிடச் செய்கிறது.

‘இதோ இவன்தான்!' என்று அவள் என்னைப் பார்த்துச் சீறுகிறாள். அந்த லிங்கம் வேரோடு பெயர்ந்து என்மேல் சாய்கிறது. அந்தப் பயங்கரம் தாங்க முடிய-

அ. -2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/23&oldid=1123400" இருந்து மீள்விக்கப்பட்டது