பக்கம்:அலைகள்.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அலைகள் இ 229

ஒன்றும் செய்ய இயலாது அங்கே காத்துக் கொண்டேயிருக் கிறேன்.

விளக்குகூட வைத்தாகிவிட்டது.

நாற்கூடவில் வண்டிகளுக்குக் கைகாட்டி நிற்கும் செந்தலை என்னைச் சந்தேகத்துடன் பார்க்கிறான்.

இவளாயிருப்பாளா?

இல்லை இவளா?

இவளா??

இவளா???

ஒருத்தி தன் தோழியிடம், என் காது கேட்க *ஸ்ெமியா?” என்று ரகஸ்யமாய்க் கேட்டு அவள் தோளையிடித்துச் சிரிக்கிறாள்.

இன்னொருத்தி முகங் கடுக்கின்றாள்.

என்னையறியாமலே என் கண் துளும்புகிறது.

p

ஏமாறுவது என்றால் என்ன? தேடலுக்கு மற்றொரு சொல்லா? அல்லது தேடலுக்கே ஏமாறுதல் என்ற பொருளா?

ஏமாறலே தேடலின் தீவிரத்துக்கு சோதனை.

நாம் என்ன தேடியும், கடைசியில் கிட்டுவதுதான் கிட்டும் பொருளுக்கு நம்மைத் தயாராக்கும் பதனம் என sofriarr?


‘மாதவா, இங்கே ஒரு நிமிஷம் வந்துட்டுப் போயேன் 1’’

விசுப் பலகையில், ஜன்னலோரமாய், அம்மா உட்கார்ந் திருக்கிறாள். அவள் மடியில் இருபாதிகளாய் அரிந்த மாதுளம்பழம் கிடக்கிறது.

அ.-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/231&oldid=667036" இருந்து மீள்விக்கப்பட்டது