பக்கம்:அலைகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் O 233


நான் ஏன் பூரணும்? அவன் கண்டது ரம்பை அவன் தாரம் அவன் பாடு! அவன் தலை விதியை அழிச்செழுத என்னாலாமோ?”

சிக்காமு நீ என் வாழ்க்கையில் புகுந்த விதம் இப்போது தான், நீ கரையேறிய பின் உன்னிடம் ஒப்புக் கொள்கிறேன். என் வழியில் கண்ணியமில்லை என்கிறாயோ?

ஆனால் சிக்காமு உன்னை நான் ஒரு நாளும் மோசம் செய்ததில்லை. உனக்கு இப்போது தெரிந்திருக்கும்.

ஆனால் உன் பொறாமைகள், சந்தேகங்கள் பஞ்சணை மேல், உன் கூந்தலிலிருந்து மலர் விழுந்தாலும் லயம் பிசகி விடும் நேரங்களும், இறந்தவரையும் எழிப்பிவிடும் போன்ற உரத்த குரலில் உபயோகமற்ற பேச்சுக்களிடையிலும், பெருங்கணக்கில் நீ நல்லவளாய்த்தானிருந்தாய்.

உன்னில் எனக்கு ஏமாற்றமில்லை.

நான் எதிர்பார்க்கவில்லை.

அதனால் ஏமாற்றமில்லை.

உன்னை நான் அடைந்ததும், என் தேடல் தானே நின்றது.

அவளுக்கும் எனக்குமிடையில் அவளை மறைத்த சாயலாய் நின்றாய்.

உன் மயக்கத்தில் அவளை மறக்க, என்னை மறக்க மனங் கொண்டேன்.

என்னை மறந்தால் அவளை மறக்கலாமன்றோ?

ஆயினும் சாதனை என்பதும் ஒரு நினைப்புத்தான் என இப்போது தானே தெரிகிறது!

அவளை நான் மறந்தாலும் அவள் என்னை மறப்பாளில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/235&oldid=1285674" இலிருந்து மீள்விக்கப்பட்டது