பக்கம்:அலைகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் O 237


வாஞ்சியின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

வாஞ்சி, ஆபீஸில் 'தப்புத் தண்டா' வில் மாட்டிக் கொண்டு விட்டான். அதற்கு அவன் தன் சோம்பேறித்தனத்தில், தன் கீழ் சிப்பந்திகளை ரெம்பவும் நம்பி அவர்கள் காண்பித்த இடத்தில் கையெழுத்துப் போட்டதுதான் காரணமோ, அல்லது. எவ்வளவு திடசித்தமுடையவனையும் சமயத்தில் காலை வாரி விடும் சபல புத்தியோ, எனக்கு. நிச்சயமாய்த் தெரியாது. மோசடியை நான் கண்டு பிடிக்கும்படி நேர்ந்து விட்டது.

ஆபீஸில் அவன்மேல் நடவடிக்கை எடுத்தாகின்றது. இரண்டு மாதங்களாய் 'ஸஸ்பென்ஷனி'ல் இருக்கிறான். அவன் வேலையை ஒழுங்குபடுத்தி, அதன் கணக்கு வழக்கு. ஊழல்களைச் சரிப்படுத்தும் பொறுப்பு என் தலையில் விழுந்தது.

இன்று துரை என்னைத் தன் அறைக்குக் கூப்பிட்டான். நான் உள்ளே நுழைந்ததும் தன் இடத்திலிருந்து எழுந்து மேஜையைச் சுற்றி-(மேஜையா அது, டென்னிஸ் கோர்ட்!): என்னிடம் வந்து கை குலுக்கினான். அவன் இடது கையில் ஒரு கவர்.

“மிஸ்டர் மாடவ், ஹெட் ஆபீஸ் தங்கள் நன்றியை உங்களுக்குத் தெரிவிக்கும்படி எனக்கு எழுதியிருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும்..."

அவன் சொன்னதெல்லாம் முழுக்க வாங்கிக்கொண்டேனா? கையில் வாங்கிக்கொண்ட கவரைத் திருப்பித். திருப்பிப் பார்க்கிறேன். ஒட்டியிருக்கிறது கணக்கிறது,

இப்போது நான் வாஞ்சியின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

இதுவரை வாஞ்சியின் வீட்டுக்கு நான் போனதில்லை. ஆனால் எத்தனையோ முறை அழைத்திருக்கிறான் வாஞ்சி. "லஷ்மியின் சப்பாத்தியையும் 'பாஜி'யையும் ஒருமுறை நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/239&oldid=1286153" இலிருந்து மீள்விக்கப்பட்டது