பக்கம்:அலைகள்.pdf/240

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


238 இ லா. ச. ராமாமிருதம்

ருசி கண்டுவிட்டால், நீ என்னவோ பீற்றிக்கொள்ளும் குஜராத்தி பவன்கள் அவள்கிட்ட பிச்சை வாங்கணும்

ஆனால் இதுவரை அவன் அழைப்பை ஏற்க எனக்கு வாய்த்ததில்லை. இந்த இரண்டு மாதங்களாய் நாங்கள் சந்திக்கக்கூட இல்லை. காரணம்: ஒருவருக்கொருவர் லஜ்ஜை தான்.

வாஞ்சீ!’ தொண்டையின் திடீர் கரகரப்பில் என் குரலே எனக்கு வினோதமாயிருக்கிறது. கதவு ஒருக்களித்துத் தானிருக்கிறது. மெதுவாய்த் தள்ளுகிறேன். உள் வாங்கு கிறது.

உள்ளிருந்து ஒரு பையன் ஒடி வருகிறான். என்னைப் பார்த்ததும், நின்று, புரியாமல் மிரள மிரள விழிக்கிறான்.

‘அம்மா! அ ப் பா ைவ த் தேடிண்டு யாரோ வந்திருக்கா!’

முன்றானையில் கையைத் துடைத்தபடியே அவன் தாய் வருகிறாள். என்னைக் கண்டதும் சட்டென நிற் கிறாள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நிற் கிறோம்.

இது எப்படி சில சமயம் நேருகிறது என்றுதான் தெரிய வில்லை. ஒருவருக்கொருவர் யார் என்று தெரிவித்துக் கொள்ளத் தேவையில்லை. சொல்லாமலே எங்களுக்கு எங்களைத் தெரியும். அவள் முகத்தில் தணல் கணகணக் கின்றது. நெற்றியில் குங்குமம் ஒழுகி வழிகின்றது.

பையனுக்கு என்னைக் கண்டு லஜ்ஜையோ பீதியோ தெரியவில்லை. ஒடி அம்மாவைக் கட்டிக்கொண்டு அவள் பின்னாலிருந்து என்னை எட்டிப் பார்க்கிறான். முகத்தில் இன்னும் பால் மாறவில்லை. தலை குருவிக்கூடாய் வளர்ந் திருக்கிறது. இன்னும் முடி கொடுக்கவில்லை போலும். பெரு விழி வட்டங்களில் நடுவே மூக்கின் எடுப்பு, கிராமத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/240&oldid=667053" இருந்து மீள்விக்கப்பட்டது