பக்கம்:அலைகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் O 239


பனைமேடு பிரிக்கும் இரு குளங்களை நினைவு மூட்டுகின்றது.

அவள் அவனை ஒரு கையால் அணைத்துக் கொள்கிறாள். என்னைக் கண்ட குளிரில் அவர்கள் இருவரும் அப்படி ஒடுங்குவது காண, எனக்கு நெஞ்சை என்னவோ வேதனை பண்ணுகிறது. வாய் அடைத்துவிட்டது. உறையை அவளிடம் நீட்டுகிறேன். வாங்கி முன்னும்பின்னும் திருப்பிப் பார்க்கிறாள். விழிகள் விரிகின்றன. கவர் கை நழுவுகின்றது. அவள் கீழே விழுந்து என் பாதங்களைப் பற்றினதும் எனக்கு உடல் பதறுகிறது. ஆயினும் செயலிழந்து மரமாய் நிற்கிறேன். குனிந்த அவள் குடல் குலுங்குகிறது.

"அம்மா! அம்மா!!" பையன் அலறுகிறான்.

அவள் கண்ணீர் என் பாதங்களை நனைக்கையில் ஒவ்வொரு சொட்டும் ஒரு ப்ரளயமாய் வீங்கி, நான் அதில் மூழ்கிப் போகிறேன் , என் விழியில் எழுந்த கண்ணிர்த் திரை யில் எழுதிய உருவில் அவள் தரிசன மாய்ப் படபடக்கின்றாள்.

நான் தேடாத சமயம், சற்றும் எதிர்பாராத சமயம் திடுமென எதிர் தோன்றி வேளை காட்டுகிறாளோ? என் பாதம் தொட்டுத் தன் பணிவு காட்டி எனக்கு விட்டுக் கொடுக்கின்றாளோ? அல்ல, தன் வெற்றியை நிலைநாட்டுகிறாளோ?

சமயங்களில் சமயங்களின் உருப்பெறுவதன்றி தனக்கென்று தனி உருப்பெற இயலாள் என எனக்கு ஊமையில் ஒப்புக்கொள்கின்றாளோ? என் வெற்றி இவ்வெற்றி, என்ன வெற்றி? -

என் வெற்றியைக் கழற்றி அங்கேயே விடுகிறேன். என் காலை மெல்ல, மெதுவாய், விடுவித்துக்கொண்டு வாசற்படி தாண்டு முன் ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன்.நமஸ்கரிப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/241&oldid=1286156" இலிருந்து மீள்விக்கப்பட்டது