பக்கம்:அலைகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244 O லா. ச. ராமாமிருதம்



அவரும் பழுத்து ஆச்சு. இப்போ அழுகிண்டிருக்கார்: ஒரு சுமுகம் உண்டா, சதா விஷத்தைக் கக்கிண்டு!”

"நம்பேரில் விஷம் கக்கினால் என்ன? பாம்பு தன் மண்டை மாணிக்கத்தைக் காப்பதுபோல் அல்லவா அவளை அடை காக்கிறார்!"

எனக்கு மயிர் கூச்செறிகிறது. ஸிந்துவைப் பிடித்த என் கை இறுகுகிறது.

ஸிந்து என் மாணிக்கம்.

என் தேடலிலேயே ஊறி ஊறி அவள் உறைந்து கருவாகி உருவாகி, தன் ஒளி காட்டி, தன்னிடம்வர வழியும் காட்டும் என் தேடற் பொருள்.

னால் எதுவுமே எதுவரை: ஸிந்து என்னை இப்போது பிரிந்துவிடப் போகிறாள். என் கழுத்தை நெறிப்பதுபோல் கட்டிக்கொண்டு என் மார்மேல் படர்ந்திருக்கிறாள் உடல், நெருப்பில் வதங்கிய வெற்றிலையாய்ச் சுருண்டுவிட்டாள்.

கொட்டு மழையில் ஒதுங்க இடமின்றி இருவரும் சொட்ட ச் சொட்ட நனைந்து வந்த அன்றிலிருந்து ஒரு வாரம் நேற்றிரவுவரை உடல் மழுவாய்க் காய்ந்தது. இன்று கம்பளிக்கடியிலும், முழங்கால் சில்லிப்பு மெதுவாய, ஆனால் தீர்மானமாய் இரக்கமற்று மேல் ஏறிக்கொண்டே வருகிறது.

என்னை அவளுக்குத் தெரியவில்லை. அவள் தாய் என்னிடமிருந்து அவளைப் பிடுங்கப் பார்க்கிறாள். ஆனால் குழந்தையின் ஆலிங்கனம் என் கழுத்தை நெறிக்கின்றது. வாய்க் கூரையை வரண்ட நாக்கு "தாத்தா தாத்தா" என்று சப்தமற்று உதைக்கின்றது.

“என் கண் எங்களிடம் ஒட்டாமலே போயிட்டாளே!” என்று பாலுவின் மனைவி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/246&oldid=1286162" இலிருந்து மீள்விக்கப்பட்டது