பக்கம்:அலைகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

O லா. ச. ராமாமிருதம்


விழிகள், கீழே விழ மறுத்து அங்கேயே வரண்டுவிட்ட கண்ணீரின் காங்கையில் கனன்றன. மழமழத்துக் கருங்கல்லாயிருந்த சதை சுருங்கி, சொரசொரத்து எலும்புக்குப் பாரமாய்த் தொங்கிற்று.

முறை மறந்துபோய், சேர்ந்து வருவதுபோல், நேரத்துக்கொருமுறை நீண்ட உலைமூச்சு கிளம்பிற்று.

முதலியார் எப்பவுமே பேசமாட்டார். கால்மணி, அரை மணிக்கொருமுறை, மூக்கில் சதை அடைத்துக் கொண்டாற்போல், ஒரு கரடி உறுமல்தான் அவர் பாஷை, ’’

"நெல்லை மாடு மேயுது."

"தலை முழுவணும், சுடுதண்ணி விளாவு, "

"எள்ளுத் துவையலில் புளிகூட.”

“பிள்ளையார் கோயிலுக்கு விளக்கு வெச்சாச்சா?’.

“பண்டாரம் வாசல்லே பசின்னு நிக்குது. "

அந்தந்த சமயத்தின் அந்தந்த அர்த்தத்தை அவர் மனைவியால்தான் புரிந்துகொள்ள முடியும்,

"உத்தமி, சுமங்கலி கொடுத்து வைத்தவள். முற்றத்தின் நடுவில் மேடை கட்டினாற்போல், மஞ்சள் பற்றிய நெற்றியில் பலகையா அந்தக் குங்குமத்தை இன்னி முழுக்கப் பார்த்துண்டிருக்கலாம்!"

அதெல்லாம் சரிதான். அல்ல சரிதானோ என்னவோ? ஆனால், வாய்விட்டுத் தீர்க்காததால் தன் மேலேயே திரும்பி விட்ட துக்கத்தின் சிதையில் மனிதன் உயிரோடு வேகும் அனல் என்மேல் தெறிக்கின்றது.

2

ரு கலியாணத்துக்குப் போயிருந்தேன். ராத்திரி 'டின்னர்' பாதிநடந்து கொண்டிருக்கிறது. பாதம்கீர் சமயம் கையில் ஏந்திய தொன்னையில் பவுனை உருக்கி வார்த்தாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/250&oldid=1286368" இலிருந்து மீள்விக்கப்பட்டது