பக்கம்:அலைகள்.pdf/256

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


254 இ லா, ச. ராமாமிருதம்

அவள் எங்கே, எப்போது ஏறினாளோ, மற்றவர் கள் எங்கெங்கே, எப்போது இறங்கினார்களோ தெரியாது. ரயிலின் தாலாட்டு அவ்வளவு சுகமாய் இருந்திருக்கிறது.

கண்ணன் எனக்கு முன்னாலேயே விழித்துத்கொண்டு விட்டான். அவன் உடம்பில் என்னதான் ஒடுகிறதோ, அவனால் ஒரு நிமிஷம் சும்மாயிருக்க முடியாது. ஆம்பி லேறித்தோம்பில் விழுவதும், ஜன்னல் வழி எட்டிப் பார்ப்பதும், பதில் கிடைக்காத கேள்விகளைக் கேட்பதும்தூங்கும் சமயத்தில் கூட, நிஷடையிலிருப்பதுபோல் விழிப்பி லிருக்கிறான்.

எதிர் வnட்"டில் இருக்கும் அவள் குழந்தையை சிதே கிதம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான். அவள் காதுவரை இழுத்த மையின் மாயத்தில், அளவினும் பெரிதாய்த் தோன்றிய அகன்ற விழிகள் முதலில் லேடி” தோரணை. பிறகு வியப்பு, பிறகு மகிழ்ச்சி பிறகு படிப்படியாய் வயதுக்கேற்ற தன்மைக்குக்கிறங்கி கண்ணன் சேஷ்டை களில் அவை குழைந்தன. ஒருவரையொருவர் முதலில் மெளனமாய் ஆராய்ந்த பின், அவள் பட்டுச் சொக் காயைத் இவன் தொட்டுப் பார்க்க, அவள் தோள் களைக் குலுக்கிக்கொள்ள இருவரும் விளையாட ஆரம் பித்துவிட்டனர்.

ஜன்னலுக்கு வெளியே கவனித்துக் கொண்டிருந்த தாயின் முகம் பக்கவாட்டில் திரும்பியிருந்தது.

எட்டினால் தொட்டுவிடலாம்போல கிட்டத் தழைந்து தோன்றிய வானில் செந்திட்டு வீசிப் படர்ந்தது. பாலங் களினடியிலே ஜல ஜரிகை ஓடி வீசிற்று. ஒவ்வொரு விடிவும் ஒரு புது வாழ்வு எனும் உண்மையின் துலக்க மாய், ஆங்காங்கே, மிருக மனித உருவங்கள் சிறிதும் பெரிதுமாய், தாவரங்களிடையே திடீரென முளைத்தன.

‘இப்படி இப்படி இருந்திருந்தால் எப்படி எப்படி இருந் திருக்கும்?’ என்று பசித்தவன் பழங்கணக்கு எண்ணங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/256&oldid=667081" இருந்து மீள்விக்கப்பட்டது