பக்கம்:அலைகள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"தெறிகள்’’ O 255


குழைத்து, ஜன்னலின் சட்டத்துள் தீட்டிய சித்திரமா அல்லது உயிர் முகமர், அல்லது முழுத் தூக்கம் கலையா அரை விழிப்பில், மனத்தின் அடிவாரத்தினின்று, இந்த ஜன்மத்தில் முழுக்காரணம் புரியாது. எத்தனயோ முற் பிறவிகளுள் எப்பிறவியின் அச்சாலோ எழுந்து, இதோ மறுகணம் மறைந்துவிடப்போகும் கனவா?

“வீல்” என அலறல் கேட்டு இருவரும் துடித்துத் திரும்பினோம். அந்தப் பெண் வலது கன்னத்தை ஏந்திக் கொண்டு கத்தினான். கண்ணன் அவளையும் எங்களையும் மாறி மாறித் திருதிருவென விழித்தபடி நின்றான்.

'என்னடா க்ண்ணா?"

அவள் தன் குழந்தையை அணைத்துக்கொண்டு கேட்டுத் தெரிந்துகொண்டதும் அவள் விழிகள் கொதித்தன. கண்ணனைப் பார்த்துத் தெலுங்கில் ஏதோ மளமளவெனக் கொட்டினாள். பிறகு அவள் குழந்தையின் முகத்தைச் சுட்டிக்காட்டி என்னிடம் ஏதோ இரைந்தாள். அவள் பெண்ணின் கன்னத்தில் வெடுக்கென சிவந்து மேலுங் கீழும் இரண்டிரண்டாய் நான்கு பற் குறிகள் தெரிந்தன. எனக்குப் புரிந்துவிட்டது.

“ஏண்டா அவள் கன்னத்தைக் கடித்தாய்?”

'எனக்குத் தெரியல்லேப்பா! பாப்பா மேலே ஆசையாயிருந்தது, கட்டிண்டேன்-"

குழந்தைக்கு முகம் வெளுத்துவிட்டது . அவனுக்குப் புரியாது, தெரியாது. கட்டுக்கடங்காத ஒரு செயலின் பீதியில் அவன் குழம்பி நிற்கையில் அவனைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது. அவனை என் பக்கமாய் இழுத்து அணைத்துக் கொண்டேன்.

அவள் தன் குழந்தையை என்னென்னவோ கொஞ்சி, செல்லம் சொல்லி, கன்னத்தைத் தொட்டுத் தடவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/257&oldid=1286376" இலிருந்து மீள்விக்கப்பட்டது