பக்கம்:அலைகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"தெறிகள்" O 257



கினாற்போல் அதில் ஒலித்தது வெற்றியா? கேலியா? கோபமா? ஏமாற்றமா? எல்லாமேவா? வேறு எதுவோ? இன்னமும் அச்சிரிப்பின் உருட்டு நெஞ்சில் தெறித்துக்கொண்டிருக்கிறது.

5

டத்தில் சுவாரஸ்யமான கட்டம். பிரபல கதாநாயகியின் பிரமாதமான நடிப்பு. திரை முழுக்க (இன்னும் இடமிருந்தால் அதையும் அடைத்துக்கொள்ளும்) அடைந்த “க்ளோஸ் அப்” ஏன், இப்பொழுது தியேட்டரில் இருக்கும் அத்தனை பேர் நெஞ்சையும் அது அடைத்துக்கொண்டு தானிருக்கிறது. குகைகள் போன்ற பெரிய கண்களிலிருந்து இரண்டுபெருக்குகள் புறப்பட்டு, மலை போன்ற பிரம்மாண்டமான கன்னங்களின் சரிவுகளிலிருந்து பின்னணி சங்கீதத்தின் சலங்கை மணி உருளல்களுக்குக் சரியாய், சரிந்து கொண்டுடிருக்கின்றன.

"த்ஸோ த்ஸோ த்ஸோ?’’-நாயைக் கூப்பிடுபவர் எத்தனை பேர்.

"ஹாஹ் ஹா"-மிளகாயைக் கடித்தவர் எத்தனை பேர்! பெண்கள் கூட்டத்தில் ஒன்றிரண்டு விசிப்புகள்.

'பட்’-படம் அறுகிறது.

ஒற்றை 'பல்ப்' ஏற்றிக்கொள்கிறது.

'பாபூ, மீனு, உடனே புறப்பட்டு வாங்கோ. அப்பாவுக்கு உடம்பு ஜாஸ்தி ஆகிவிட்டது.

எனக்கு முன் வரிசையில் எனக்கெதிர் நாற்காலிகள் இரண்டில் கலவரம் உண்டாகிறது.

"அம்மா அம்மா போயிடுவோம். அப்பாவுக்கு உடம்பு ஜாஸ்தி ஆயிடுத்தாமே!-’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/259&oldid=1286516" இலிருந்து மீள்விக்கப்பட்டது