பக்கம்:அலைகள்.pdf/260

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


258 இ லா. ச. ராமாமிருதம்

“இன்னும் கொஞ்ச நேரம், அஞ்சு நிமிஷண்டா! கதை யின் திருப்பம் தெரிஞ்சுண்டுடலாம்.”

‘இல்லேம்மா போயிடுவோம்மா, எனக்குப் பயமா யிருக்கு. இதுக்குள்ளே அப்பாவுக்கு என்ன ஆயிடுத்தோ?” அவன் தாய் சபித்துக்கொண்டே எழுகிறாள். அவள் குரல் தாழ்ந்திருந்தாலும், என் செவிகளில் பளிச்சென்று விழுகிறது.

“இந்த மனுஷனுக்கு என்ன வேலை? நித்யகண்டம் பூரண ஆயுசா வருஷமாத் தள்ளிப்பிட்டு இன்னிக்கு வேலை தேடிக்கிற வேளையைப் பாரு!’

[...] [I] [...]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/260&oldid=667090" இருந்து மீள்விக்கப்பட்டது