பக்கம்:அலைகள்.pdf/263

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதழ்கள் இ 281

அப்போத்தான் அவர் எங்கோ கிளம்பிண்டிருந்தார். :பாண்ட்’ (அது என்ன பாஷையோ-குழாய் மாதிரி யிருக்கே) அதை மாட்டிண்டிருந்தார். வாசல்லே கார் வந்து நிக்கற சத்தம் கேட்டது. நான் அடுப்பங்கரையிலே வேலை யாயிருந்தேன். வந்தால் என்ன, அவரைப் பார்க்க யார் யாரோ வரா. ஜகதான்னு கண்டேனா? அவளை நான் எதிர்பார்க்கவுமில்லை.

அப்பா வந்துரட்டேன் போங்கோ. நீங்களும் கிளம் பிண்டிருக்கேள். நானும் வந்துண்டிருக்கேன். உங்களுக்கு நல்ல சகுனம்தான் போங்கோ-?’

  • அட ஜகதாலா?” “நானேதான், வேறென்னவா உங்களுக்குத் தோண ஹது?’
  • எப்போ வந்தே?*

அதான் வந்துண்டேயிருக்கேனே தெரியல்லியா?” * தெரியறது தெரியறது” *’ என்னப்பா ஒரு மாதிரியா பேசறேள்?”

அதுக்குள்ளே நல்ல வேளையா நான் போயிட்டேன். ஈரக்கையை முந்தானையிலே துடைச்சுண்டு.

என்னைக் கண்டதும் அத்தனை குழந்தைகளும் “பாட்டி பாட்டீ'ன்னு ஓடிவந்து மொச்சுண்டுடுத்துகள். குழந்தைகளை எனக்குப் பிடிக்கலையா என்ன? அதுகளின் துஷ்டத்தனத்தைக் கண்டாத்தான் கதி கலங்குகிறது:

அட வாங்கோடா என் கண்களா! வாம்மா ஜகதா,

எப்போ வந்தே? செவாக்கியமா? வரப் போறதா ஒரு வரி போடக் கூடாதா?’’

ஜகதா என்னை ஏன் இப்படி ஏற இறங்கக் கண்ணால் அளந்து பாக்கறா?

அ.-17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/263&oldid=667096" இருந்து மீள்விக்கப்பட்டது