பக்கம்:அலைகள்.pdf/267

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதழ்கள் இ 265


சே!--

நான் வந்திருக்கப்படாதோ?

எனக்கென்னவோ அடிக்கடி இப்படித் தோன்றுகிறது, ஒரு தடவை. ஒண்ணில்லாட்டா ஒண்னு அப்பாவுக்கும் எனக்கும் தர்க்கம் வந்து டறது. அம்மாவுக்கும் கூடத்தான். சம்சாரம் பெருத்துப் போச்சு. யாருக்கு? எனக்குத்தான், அவாளுக்கில்லை. அப்போ ஆசைக்கு ஒரு பொண்ணா முன் னால் நான் பொறந்துட்டேன், ராஜகுமாரியாத்தான் வளர்ந்தேன். இன்னும் ராணியாத்தான் இருக்கேன். என்றாலும்

ஆஸ்திக்கு ஒரு அம்பியிருந்தான்.

இன்னிக்கி அவன் நாள். இன்னிக்கு அந்தப் பிரம்மச்சாரி பையன் வந்து சாப்பிட் டான். எல்லாம் பஞ்சபட்ச பரமான்னமாத்தான் பண்ணி யிருந்தது. அந்தப் பயல் புது வேஷடியைக் கட்டிண்டு கையிலே ஒரு வெள்ளிக் காசையும் வாங்கிண்டு போயிட்டு வரேன் மாமின்னு போயிட்டான். அம்மா ஈவிசேரிலே சாஞ்சுண்டு செவுத்தைப் பார்த்துண்டு இருந்தவள், மணி ஒண்ணாச்சு, ரெண்டாச்சு, முணாச்சு ஏந்திருக்கவேயில்லை, அவள் கண்ணுலே தண்ணு விடல்லே, அழுதாத்தேவலாமே!

‘அம்மா மணியாச்சே! சாப்பிடவா'ன்னு கூப்பிட பயமாயிருக்கு ,

இன்னிக்கு மோர் குழம்பையும் சிவக்க எடுத்த வடை யையும் பாக்கறப்பவே நாக்குலே தண்ணி அப்படி ஊறித்து. என்ன பிரயோசனம்? அம்மா மோரிலே பருக்கையைப் போட்டுக் கரைச்சு பிழிஞ்சு எறிஞ்சுட்டுக் குடிச்சா, எனக்கு எல்லாமே ஆறிப்போயிடுத்து, அப்புறம் என்னவேண்டி இருக்கு? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/267&oldid=667103" இருந்து மீள்விக்கப்பட்டது