பக்கம்:அலைகள்.pdf/268

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


256 இ லா. ச. ராமாமிருதம்

அப்பா ஆத்துக்கே வல்லே.

இருந்தாலும் எது விடறது? இருந்தாலும் இந்த நாளும் வந்துதானே ஆகணும். அந்தந்த நாள் அதனதன் வேளைக்கு. இப்படியேதான் ஒருஒருநாள் வாலமும் வருஷ மாப் போயிண்டிருக்கு.

கொல்லைப்புறத்துலே பவழமல்லி மரம் இருக்கே, நான் பாவாடையும் சட்டை யும் போட்டிருந்த நாள் முதல் இப்ப டியே தானிருக்கு. நாம்தான் மாறிண்டிருக்கோம் விடியறத் துலே நான் நாள் தவறாமே முழிப்பு வந்ததும் எழுந்து போய் பார்ப்பேன். அதனடியிலே மெத்தையை விரிச்சாப் போல் புஷ்பங்கள் நெருக்கமா உதிர்ந்து கிடக்கும். அணில் மாதிரி ஒருமுறை அதில் பிரண்டுட்டு வருவேன், என்மேல் மெத்து மெத்துன்னு ஒட்டிண்டிருக்கும்.

கவியாணத்தின்போதுகூட ஊஞ்சல் ஜோடிச்சபோது பார்த்தவ அத்தனைபேரும் அதிசயப்பட்டுப் போனா, என்ன ஜ்வலிப்பு: என்ன ஜ்வலிப்புடீ.1: ஒண்னொண்ணும் ஒரு ஒரு நட்சத்திரமா உயிர்விட்டு மின்னித்து. அஞ்சு நாளைக்குமா அப்படியே வாடாமல் இருக்கும்!

எப்படித்தான் ஒருநாள் கூட அலுக்காமே, ஒருநாள் தவறாமே அன்னியிலிருந்து இன்னிவரைக்கும் பூக்கறதோ?

ஆனால் எனக்கு அலுத்துப் போச்சு. இந்தத் தடவை நிச்சயமா அலுத்துப் போச்சு, என்ன வேண்டியிருக்கு?

    • Gg !—

மாஸ்த்துக்கு முப்பது நாள் அவர் காம்ப் காம்புன்னு: போயிடறார். இதுகளைக் கட்டி மேய்க்கப்படல்லே. ஆண் கட்டுப்பாடு இல்லாமல், பறக்கற பட்சிவாயிலிருந்து உதிர்ந்த விதை மாதிரி அது அது அதனதன் இஷ்டப்படி வளந்திண்டிருக்கு. நான் அடிச்சால் என்கை வலிக்கிறது. அதுகளுக்கு நெஞ்சுலே எங்கே பயமிருக்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/268&oldid=667105" இருந்து மீள்விக்கப்பட்டது