பக்கம்:அலைகள்.pdf/271

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதழ்கள் இ 269

மூடிடறது. இந்த விஷயத்திலே மாத்திரம் எந்த நியாயத் தையும் தெரிஞ்சுக்க மனசு ஒப்பல்லே.

மத்தியான்னம் ரெண்டு, மூணு மணியிருக்கும். நம்மாத் துக் குழந்தைகளுக்கு விஷமம் பண்ண சொல்லித் தரணுமா? பக்கத்தாத்து செல்வங்களும் சேர்ந்துTடுத்து. எல்லாம் சேர்ந்து கூடத்திலே கட்டில்லே சுருட்டிப் போட்ட படுக்கை எல்லாத்தையும் கலைச்சு கீழே உருட்டித் தள்ளியிழுத்து கூடாரம் போடறேன்னு விரிச்ச மெத்தையை தலைமேலே போட்டுண்டு, அதன் அடியிலே மறைஞ்சுண்டபடிய்ே தவழ்ந்துண்டு, ஒண்ணு மேலே ஒண்னு இடிச்சு விழுந்து பிரண்டு சுத்தலும் சிரிப்புமா ஒரே அமக்களம் தமுக்கடி. எனக்கே பொறுக்க முடியல்லே.

ஆனால் என் கத்தல் அதுகளின் இரைச்சலில் அமுங்கிப் போச் சு.

அப்பா பாவம் வாசல் ரூமிலே துரங்கிண்டிருந்தா. அப்பாக்குத் தூக்கம் கலைஞ்சு போயிடுத்து விடுவிடுன்னு: வந்தா. முகம் ஒரே ருத்ராகாரம். கைக்கு எந்த மெத்தை முதல்லே அகப்பட்டுதோ அதை அப்படியே தூக்கி எறிஞ்சா. அதன் அடியே இருந்ததின் முதுகிலே ஒரு அறை அறைஞ்சா. மத்தது. அத்தனையும் சிட்டாப் பறந்துTடுத்துகள். திடீர்னு அடிபட்ட பயத்துலே nமாக்கு அரையோடே ஊத்திடுத்து. எனக்கு அப்படியே வயத்தை ஒட்டிண்டது.

‘என்னப்பா என் குழந்தையை பேய் மாதிரி அறைய றேள்?’ எனக்கே நான் என்ன வார்த்தை சொன்னேன்னு சொன்னப்புறம்தான் தெரிஞ்சது. வார்த்தை நாக்குலே ருந்து வந்தா தெரிஞ்சிருக்கும், அடி வயத்துலேருந்து வரப்போ?... -

அப்பாவையே நான் அறைஞ்சுட்ட மாதிரி ஒரு வினாடி

திக்கு முக்காடி அப்படியே நின்னூட்டா. அப்புறம் மெதுவா திரும்பினா என் பக்கம், சிலை திரும்பற மாதிரி. நேக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/271&oldid=667113" இருந்து மீள்விக்கப்பட்டது