பக்கம்:அலைகள்.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


270 இ லா. ச. ராமாமிருதம்

பயமாயிருந்தது. ஆனால் துணிச்சல் ஒண்னு தனியா எங் கிருந்தோ வந்துடுத்து.

“குழந்தைகளா இது? ஒண்ணெண்ணும் ஒரொரு வானரம்னா-’’

‘வானரம்னு சொல்லாதேங்கோ என் குழந்தை களை'ன்னு சீறினேன்.

“வானரம்னு சொல்லல்லே கிஷ்கிந்தாக்கள்ன்னு அழைக்கட்டுமா?’’ -

நேக்கு ஒரேயடியா அமுகை வந்துாடுத்து. வாடி கண்ணே nமா'ன்னு அவளை இழுத்து அணைச்சுண்டு விக்கிவிக்கி அழுதேன். (அதென்னமோ தெரியலை, அழற துக்கு மாத்திரம் கூட ஒரு ஆள் வேண்டியிருக்கு!)

அப்பாக்கு மூஞ்சி கிளிஞ்சல் சுண்ணாம்பு மாதிரி தளைச் சுது.

இத்தனை நாழி இதெல்லாம் அம்மா வேடிக்கை பார்த் துண்டிருந்தவ, கிஷ்ணிச் சுண்டு ஏதோ தினுஸ்ஸா குரலைப் பாகுமாதிரி ஸ்ன்னமா இழுத்துண்டு:

‘ஏண்டிம்மா ஜகதா, உன் குழந்தைகளை எடுத்துக் கொஞ்சவும் சீராட்டவும் உரிமையுண்டு-துஷ்டத் தனம் பண்ணா ஒரு தட்டுத்தட்ட பெரியவாளுக்கு சுதந்திரம் கிடையாதா?’’

‘கிடையாது சுண்டைக்காய்த் தோசை கடிபடறாப் போல வெடுக்குன்னேன். அம்மாக்கு ஆத்திரம் புட்டுண்டு டுத்து. -

“என்னடி சுயபுத்தியோடேதானிருக்கையா இல்லே-’’

‘நீ சும்மாயிரு’ அப்பா அம்மாவை அடக்கினார்.

ஜகதா- அப்பா குரல் நிதானத்திலிருந்தே, நெஞ்சுலே எவ்வளவு அடக்கிண்டிருந்தார்ன்னு தெரிஞ்சுது. ஜகதா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/272&oldid=667114" இருந்து மீள்விக்கப்பட்டது