பக்கம்:அலைகள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274 O லா, ச. ராமாமிருதம்


“தாத்தா-"

"சை கழுதை!" அப்பா குரல் பின்னாலேருந்து கேக்கறது. "என்னைத் தாத்தான்னு கூப்பிடக் கூடாதுன்னு சொன்னேனா?"

"மறந்து போச்சு தாத்தா-"

"இங்கே வாங்கோளேன்-" அம்மா சமையலறையிலிருந்து கூப்பிடறா, அப்பா போகிறார். ஆம்படையான் பெண்டாட்டி ரெண்டு பேரும் என்னவோ ரகஸியமா பேசிக்கறா.

எனக்கு அவர் நினைவு வரது. இப்போ என்ன பண்ணிண்டிருக்காரோ?

ஒருவேளை நிஜமாவே அவர் செளகரியத்தை நான் சரியாய்க் கவனிக்கல்லையோ!

போற இடத்திலெல்லாம் அவருக்கு சாப்பாடும் தண்ணியும் செளகரியமா அகப்படறதுன்னு நிச்சயமாச் சொல்ல முடியுமா? கண்ட இடத்திலே அகப்பட்டதைப் பொங்கித் தின்னுண்டு. அதுவும் இல்லாத இடத்தில், ரெண்டு வாழைப் பழத்தையோ கிழங்கையோ முறிச்சுப் போட்டுண்டு அவர் காலத்தைத் தள்ள வேண்டியதுதானே! நல்லவயசு காலத்தில், இஷ்டப்படி தின்னு அனுபவிக்கிற, நாளில் அவர் தலையிலே மாத்திரம் அப்படி எழுதியிருக்கணுமா? கேட்டால் அதுக்கும் தான் பதில் சொல்றார். "எல்லாம் நம் குழந்தைகளுக்காகத் தான். எல்லாம் ஒடறகாலத்தில் ஒடி சம்பாதிச்சால்தானே, திண்ணையோடு விழுந்து கிடக்கற நாளுலே நம் குழந்தைகள் வாயிலே புகுந்து புறப்படாமயிருக்கலாம்!” அவர் அப்படி சொல்ற சமயத்திலேயே நான் குடும்பத்தைப் பெருக்கிண்டிருக்கேன்.

புரியாத ஒரு ஆத்திரம் திடீர்னு எனக்கு; என் வயத்துலேயிருக்கறத்துக்கு மேலே இன்னமும் நான் எத்தனை குழந்தைகளுக்கு தாயாராக-என் தலைவிதியும் எனக்கு சக்தியு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/276&oldid=1287234" இலிருந்து மீள்விக்கப்பட்டது