பக்கம்:அலைகள்.pdf/277

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதழ்கள் இ 275

மிருக்கோ அத்தனை குழந்தைகள் மேலேயும் பள்ளம் மேடு தெரியாத முடாந்தமான ஒரு கோபம் ஜ்வாலை மாதிரி கிளம்பித்து. அதிலேருந்து ஒரு தீர்மானமும் உருவாகிப் புறப் பட்டது.

சட்டுனு எழுந்திருந்தேன். சுவாமி பிறையில் சூட டப்பாவிலேயிருந்து எலுமிச்சம்பழம் பெரிசுக்கு ஒரு கற்பூரக் கட்டியை எடுத்துண்டேன். இங்கே இருந்தால்கூட தெரிஞ் சுடும்னு கையுள்ளே மடக்கிண்டு தோட்டத்துக்குப் போனேன். கடையக் கடைய வெண்ணெய் கேட்டியாற மாதிரி நெஞ்சில் தீர்மானம் திடமாயிண்டிருக்கறது எனக்கே தெரியறது.

அப்போ என்மேல் ஏதோ உதிர்ந்து தோள்மேல் தங்கித்து. எடுத்து உன்னிப் பார்க்கிறேன். நட்சத்திர வெளிச்சத்துலே, உள்ளங்கையில் ஒரு பவழ மல்லியின் வெளுப்பு பளிர் என்கிறது. எனக்கு ஒரே அதிர்ச்சியா இருந்தது.

அது ஏதோ ஒரு எச்சரிக்கையின் அடையாளமா யிருந்தது.

என் கையில் அது தங்கி என்னையே விசனத்தோடு பாக்கற மாதிரி இருந்தது.

‘அடி ஜகதா. முட்டாள்! என்ன கார் யம் செய்யத் துணிஞ்சுட்டே? நீ பிறக்றைத்துக்கு முன்னாலேருந்து நான் இங்கே நின்னுண்டு என் வேலையை செஞ்சுண்டிருக்கேன், நீ இன்னும் முளைச்சு மூனு இலை விடல்லை. என்ன அலுப்புடி உனக்கு வந்துடுத்து? என்னத்தடி கண்டுட்டே அதுக்குள்ளேயும் நீ?”

‘அம்மா அம்மா!’ எனக்குத் திடீர்னு அழுகை வந்து டுத்து. பயங்கூட இல்லை. என்னையறியாமலே தடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு மரத்தை அப்படியே கட்டிண்டுட்டேன். தேம்பித் தேம்பி வரும் அழுகையில் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/277&oldid=667124" இருந்து மீள்விக்கப்பட்டது