பக்கம்:அலைகள்.pdf/279

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதழ்கள் இ 277

‘நீ பேசறதும் சிரிக்கறதும் வருத்தப்பட்டுக்கறதும் உடனே சந்தோஷப்பட்டுக்கறதும் யா ரு க் கு டி ம் மா புரியறது?’’ .

“உனக்கு இப்போ ஒண்னும் புரியவேண்டாம்.’

அப்பா பின்னால் கையைக் கட்டிண்டு கூடத்தில் நின்னிண்டிருந்தார்.

‘சரி சாப்பிடவா.-’’

தான் கொண்டுபோன கற்பூரத்தை ஏத்திக் கீழே வெச் சுட்டு சுவாமி பிறைக்கு நமஸ்காரம் பண்ணினேன்.

“ஏதேது கொளுத்தியிருக்கிற கற்பூரத்தைப் பார்த்தால் இன்னும் பத்து மாஸ்த்துக்கு பக்தி பண்ணவேண்டாம் போலயிருக்கே!”

நான் நெருப்புக் கொழுந்தையே பார்த்துண்டிருந்தேன்.

உள்ளூர சிரிப்பு வந்தது. நான் சூடக்கட்டியை முழுங்கி பிருந்தால் அப்பாக்கு இது மாதிரி வேடிக்கை பண்ண முடிஞ் சிருக்குமோ? அது எரிய எரிய என் நெஞ்சு ப்ரகாச மடைஞ்சது.

‘ஜகதா சாப்பிடவரையா?’’

அம்மா முகம் வெளிறிப் போயிருந்தது. அவள் குரலில் மரியாதையிருந்தது. -

அப்போத்தான் எனக்கு எவ்வளவு பசி என்கிற நெனப்பு வந்தது. எனக்கு மாத்திரமா பசி, வயத்திலேயிருக்கிறதுக் கும் சேர்த்துன்னா பசி:

பாதி சாப்பிடறப்போ அம்மா குழம்புஞ்சாதத்தை உருட்டி வாயிலே போட்டுண்டு ஜாக்கிரதையா:

‘ஜகதா ஒரு விஷயம் வெச்சுக்கோ, நானும் நாலு நாத்தனார், மூணு ஒர்ப்படிகள், மாமியார், மாமனார் கொழுந்தன்மார் எல்லோரோடும் சேர்ந்து குடித்தனம் பண்ணிட்டுத் தான் வந்திருக்கேன். கழுத்திலே தாலி கட்டின

அ.-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/279&oldid=667128" இருந்து மீள்விக்கப்பட்டது