பக்கம்:அலைகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278 O லா.ச. ராமாமிருதம்

கையை உடனே பிடிச்சு இழுத்துண்டு, தனிக்குடித்தனம் போட்டுடல்லே-’’

‘'எதுக்கு இந்தப் பீடிகை?”

நாக்கைக் கொட்டிண்டு அம்மா. ‘எதுக்கு சொல்ல வந்தேன்னா சம்சாரத்துலே ஒவ்வொண்ணுக்கும் அத்தோட அது போச்சுன்னு இருந்தால்தான், மேல் காரியத்தை ஒட்ட முடியும்! ஏன்னா ஒண்ணு பின்னாலே ஒண்ணு வந்திண்டே தான் இருக்கும்."

‘ஒ-ஹ்-ஹோ! அப்புறம்?’’

அம்மா திருதிருன்னு முழிச்சா.

“ அப்புறம்?’’

அம்மா திருதிருன்னு முழிச்சா. அவள் முழி சரியாயில்லை.

“ஏம்மா ஒரு மாதிரியாயிருக்கே?”

“வயத்தை-’’ -

வாக்கியத்தை முடிக்கல்லே கலத்துலே கையை உதறிட்டு குடுகுடுன்னு வென்னீருள் பக்கம் ஓடினாள். குமட்டல் சப்தம் அங்கிருந்து வந்தது.

நான் சாவதானமா எழுந்து கொல்லைத் தாழ்வாரத்தில் கையலம்பிட்டு வந்து மறுபடியும் சமையலுள்ளே வந்து உட்கார்ந்துண்டேன். வந்தன்னிக்கே சந்தேகப்பட்டேன்.

அம்மா உள்ளே குனிஞ்ச தலையோடு வந்து நின்னா. அவள்முகம் இப்போ அசல் ஸீமாமுகம் மாதிரியே இருந்தது. ஒரு தினுசா வேதனையும், வெட்கமும், மிரட்சியுமா, அவள் கையை இழுத்துப் பிடிச்சு உட்கார வெச்சேன். -

அம்மா என்னை நிமிர்ந்து பார்க்கல்லே. என் கழுத்து வளைவிலே முகத்தைப் புதைச்சுண்டா, ஒருகையால் அம்மாவை அணைச்சுண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/280&oldid=1287238" இலிருந்து மீள்விக்கப்பட்டது