இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இதழ்கள் O 279
இப்போ என் அம்மாவுக்கு நான் குழந்தையா, இல்லே என் அம்மா எனக்குக் குழந்தையா?
என் பக்கத்தில் பித்தளைக் குடலையில் இன்னும் பவழ மல்லி இருந்தது.
ஒரு கையால் அள்ளி அம்மாவின்மேல் தூவினேன். சிதறி அவள் தலைமேலும் தோள்மேலும் உதிர்ந்தது,
மரத்திலிருந்து பூவா?
பூவிலிருந்து மரமா?
பூவெல்லாம் அம்மா உடம்பிலிருந்து என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டித்துகள். அந்த ரகஸ்யம் அதுகளுக்குத் தான் தெரியும்.