பக்கம்:அலைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 லா. சா. ராமாமிருதம்

 அவள் கணவர், சுட்டகத்திரிக்காய் போன்று வதங்கிய சிறு தொந்தி தெறிக்க பதறியோடி வந்தார்.

"என்னடி எங்கே போயிட்டே! உன்னை அலை வாரியடித்துக்கொண்டு போய்விட்டதோ என்று பயத்து விட்டேன்- அப்பாடி!-"

இது யார் உங்க பெண்ணா? இந்த அம்மா சாகவிருந்தாங்க. நல்ல வேளையாய் நான் பார்த்தேன். என்ன இந்தமாதிரி அஜாக்கிரதையாய் இருக்க-?’’

திடீரென்று அவளுக்குச் சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது. அடிவயிற்றைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு இடிஇடியென்று சிரித்தாள்; இருவரும் அவளை ஆச்சரியத்துடன் நோக்கினர்; அச் சிரிப்பைத் தொடர்ந்தாற் போலேயே அழுகையும் வந்தது. இதயமே வெடித்துக் கொட்டுவது போன்ற அழுகை. காற்றின் வயப்பட்ட சருகு போல் உடலை உச்சந் தலையினின்று உள்ளங்கால்வரை உலுக்கும் அழுகை.

"நா-ஆ-ஆன்-சமுத்-திரஸ்நா-ஆ- ஆநம் செய்தது -போ-ஓ-ஓ-தும்-என்னை- ஐ-ஐ- சீக்கிரம்-வி-ஈ-ஈட்டுக்கு-அழை-ஐ-ஐச்சு-ண்டு போய்- ய்-ய்-ய்ச் சேருங்கோ-ஓ-ஓ- "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/32&oldid=1284278" இலிருந்து மீள்விக்கப்பட்டது