பக்கம்:அலைகள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பகல் கனவு இ 33என்று அர்த்தமா? மனத்தில் எத்தனையோ குருட்டு யோசனைகள், கோட்டைகள், ஆகாசப் பந்தல்கள். அவள் எவளாயிருந்தால் எனக்கென்ன? வணிகச்சியோ, கிருஸ்துவச்சியோ, பிராமணத்தியயோ?

ஆனால், அவள் என் மடியில் செத்தாள்.

எனக்கே துக்கிவாரிப் போடுகிறது. திடீரென்று அவள் முகம் வெளிறிட்டது. கண்கள் பெரிதும் விரிந்து மலர்ந்து, விழிகள் சுழன்றன. தலையாடியது. துவண்டு அப்படியே குப்புற என் மடியில் சாய்ந்தாள்.

நான் ‘ஒ’ என்று கத்திவிட்டேன். அவளை என் மடியில் நிமிர்த்திப் புரட்டினேன். கைநாடியைப் பிடித்துப் பார்த்தேன்.

ஊஹூம். பேசவில்லை...! விழிகள் செருகின.

மாரடைப்பு. இதற்கு வேளையுண்டா, காரணமுண்டா? வண்டியில் நேரிட்ட குழப்பத்தைக் கேட்கவும் வேண்டுமா; வண்டி நின்றுவிட்டது.

வண்டியில் எங்கேயோ ஒரு மூலையிலிருந்து அவள் புருஷன் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு பாய்ந்து வந்தான். வண்டியில்தான் மகத்தான கூ ட் ட மா யி ரு க் கி ற ேத! யாராரோ எங்கெங்கோ அகப்பட்ட இடத்தில் உட்காரவோ, நிற்கவோ, வாரைப்பிடித்துக் கொண்டு தொங்கவோ, தொற்றிக் கொள்ளவோ வேண்டியதுதானே !

அவனும் சின்னப் பையன்தான். இருபத்தைந்து வயது இருக்குமா?-சிவப்பாய், மூக்கும் முழியும், அரும்பு மீசையமாயிருந்தான். சரியான ஜோடிதான்.

மார்பில் கைவைத்துப் பார்த்தான்.

என்ன பிரயோஜனம்? பட்சி எப்போதோ பறந்து விட்டது. என் மடியில் சடலம்.

”ஜட்கா!-ஜட்கா!!’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/35&oldid=1126131" இருந்து மீள்விக்கப்பட்டது