பக்கம்:அலைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகல் கனவு O 35



இருந்தால்??... இருந்தால் என்ன? தெரிந்து என்ன ஆக வேண்டும்?. எவளா யிருந்தாலென்ன? எங்கே யிருந்தோ வந்து, வேளை நெருங்கியதும் என்னிடம் சாகவேண்டுமென்றே வண்டியில் ஏறி, நேரே என் மடியில் விழுந்து செத்தாள். ஏதோ முன்ஜன்மத்தின் பிணைப்பு. கொண்டவன் மடியில் சாகிறதுதானே...?

விதி! ஆம், இதுதான் விதி!

வ்வளவுதான். என் மனதில் அவளையும் என்னையும் வைத்து நான் புனைந்த கதை வாய்வார்த்தைக்கும் வராது . ஏட்டிலும் ஏறாது. அது ஒர் எழுதாத காவியமாய் மாறியது, சகுந்தலை-துஷ்யந்தன், நளன்-தமயந்தி, சாவித்திரி_சத்யவான், பிருத்விராஜ்-சம்யுக்தை இவர்களைப் போன்ற மற்றவருடன் நாங்களும் சேர்ந்துவிட்டோம்.

இந்தக் காவியத்தில், நான் மணம் செய்துகொண்டு குடித்தனம் நடத்தும் மனைவிக்கு இடமில்லை. மாடியை விட்டிறங்கி வாசலுக்குப் போய் மண்ணைத் தின்றுகொண்டு வயிற்றில் கட்டியைப் பெருக்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு இடமில்லை.

இடுப்பில் சவாரி செய்துகொண்டு இரவென்றும் பகலென்றுமில்லாமல் எப்போதும் அழுத கண்ணும் ஒழுகிய மூக்குமாயிருக்கும் கைக்குழந்தைக்கு இடமில்லை. வயிற்றிலிருந்துகொண்டே, மருந்தென்றும், மாயமென்றும், வவியென்றும். வியாதியென்றும், செலவும் கவலையுமாய் மனிதனின் உயிரையே குடித்துக்கொண்டிருக்கும் வித்துக்கும் இடமில்லை. நாங்கள் இருவர்தான், நானும் என் மடியில் செத்துவளும். நாங்கள் இருவரும் கூடிய அந்தக் கற்பனை வாழ்க்கையில், பசும்புல் தரைகளும், நீரோடைகளும் நிலவும் நிம்மதியும், நித்திய சுகமும்தான் இருந்தன. நாங்கள் இருவரும் கந்தர்வர் ஆகிக் ககனத்தில், நீந்திக் கொண்டிருந்தோம்..... ஆனால், ஆனால் இந்தச் சாவு! என் உடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/37&oldid=1285564" இலிருந்து மீள்விக்கப்பட்டது