பக்கம்:அலைகள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குண்டலி இ 41
 

 அம்மா செவியைப் பொத்திக்கொண்டாள். என்னிடம் வந்து கையை நீட்டினாள். விழிகள் வழிந்தன.

"அம்பி அடித்துக்கொடு. நீ பெரியவனாகி வேறு எந்த உத்தியோகத்துக்குப் போ ன லு ம் இதுக்கில்லேன்னு எனக்குக் கை தட்டிக்கொடு"

நான் தைரியமூட்ட முயன்றேன். "இது இல்லா விட்டால் எப்படியம்மா, காசு இல்லாமல் காசிக்கும் கன்னியாகுமரிக்கும் போக முடியும்?”

என்ன வேண்டிக் கிடக்கு?’ அம்மா வயிற்றைப் பிசைந்துகொண்டு குறுக்கும் நெடுக்குமாயலைந்தாள். (அதற்குக் கூட இடம் பற்றாத விடுதி!) "ஒரு நிமிஷ நிம்மதியுண்டா? மனுஷாளுக்குத் துக்கம் கெட்டால் ஆயுசுலே அப்புறம் என்னடா இருக்கு? இதென்ன குருவிக்காரன் குடுகுடுப்பைக்காரன் பிழைப்பு-அடிக்கடி டேரா தூக்கிண்டு? குழந்தைகளின் படிப்பு பாழ்! அண்டை அசலார் முகமாற்றம். பொழுதுபோக்கு உண்டா? சுடலைக்கழுகு மாதிரி தனியா இடத்தைக் காத்திண்டு என்ன பிழைப்பு இது? சம்பளமும் கட்டை; ஆனால் மண்டைமேல் கர்ணம் தப்பினால் மரணப் பொறுப்பு-”

அம்மா சொன்னது முழுதும் மனம் வாங்கிக்கொண்டதோ இல்லையோ? அந்த ஒலம் மறுபடியும் எழக் காத்திருந்தேன். ஆனால் கேட்கவில்லை.

கேட்டால்தான் நாங்கள் என்ன செய்யமுடியும்? ஒருவர் உதவிக்குப் போக முடியுமா?

அவரவர் விதி அவரவரின் புனைதல் என்பது மற்றெங்கினும் இங்குதான் கண்கூடு.

காலடியில் மணியாங்கற்கள் நொறுங்கின."சரக்சரக்” கெனும் மிதி சப்தம்கூடப் பழமையை ஞாபகமூட்டிற்று. அதோ மூன்று காலில் பாழ் மண்டபம்-அப்படியேதான் இன்னும் நொண்டுகிறது. இப்போது என் தம்பிபோல், நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/43&oldid=1127073" இருந்து மீள்விக்கப்பட்டது