பக்கம்:அலைகள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குண்டலி இ 43

ஸ்டேஷனின் பேர்ப்பலகை நட்டு நிற்குமிடத்திலிட்ட பெஞ்சின்மேல் ஒரு உருவம் தெரிந்தது. யாராவது இறங்கி னார்களா? டிக்கட் இல்லாமல் டிமிக்கி கொடுக்கக் காத் திருக்கிறானா?

இரண்டடி எடுத்து வைத்ததும் என் மனைவியென்று கண்டேன். அவளை விளிக்க உயர்ந்த சையை ஒடுக்கிக் கொண்டேன்.

‘கார்டு டன் சச்சரவில் நான் மானமிழந்து நிற்பதைக் கண்டுகொள்ளாது அங்கேயே நாகுக்காக நின்றுவிட் டாளோ? வந்த சிரிப்பையடக்கிக் கொண்டேன். ஏனெனில் எங்களிடையில் ஒருவருக்கொருவர் மனம் நளினம் கண்ட நாட்கள் கடந்தாகிவிட்டன. அவரவர் மனத்தில் அவரவர் புழுங்கும் நிலையில் இப்போதிருந்தோம். தன் யோசனை களில் ஈடுபடத் தனிமைக்கு வந்திருக்கிறாள். பாவம்: அவளை ஏன் கலைக்கவேண்டும்?

இந்தண்டை வேப்பமரத்தடிப் பெஞ்சில் உட்கார்ந் தேன்.

நான் இங்கே-அவள் அங்கே. கணவன் மனைவியே ஆயினும் நாங்கள் வாழ்வின் வழிப்போக்கர்கள். அவரவர் விதியின் புனைதல் அவரவரதே எனும் முறையில் நாங்கள் இருவரும் முற்றிலும் அந்நியரே என்பதற்கு இதைவிட ருஜூ எது? என் விதியுடன் அவள் விதி பிணைக்கப்பட்டிருப்பது அவள் விதிவந்த வழி. ஒற்றுமையாமோ?

பயல் தூங்கியிருப்பான். அதான் கொஞ்சம் ஒய்வா யிருக்கிறாள்.

மூன்று, எவர் ஐதீகத்திலேயும் ஒரு ஆரம்பத்தையோ முடிவையோ நிறுவும் முக்யமான எண் எனக் கருதுகிறேன்.

• ‘One-Two—Three—Off”

ஒரு தரம் ரெண்டுதரம் மூணு தரம்-விட்டுட்டேன்!”

ஜலமும் மூணு பார்க்கும்!'"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/45&oldid=667170" இருந்து மீள்விக்கப்பட்டது