பக்கம்:அலைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குண்டலி O 49


விட்டுக் கொள்கிறார், உடலும் முகமும் தக்காளிபோல் சிவப்பேறித் தகதகக்கின்றன.


ன்னடா அம்பி உடம்பு சுகமில்லையா? உனக்குப் பிரியமாச்சேன்னு மைசூர் ரஸம் வெச்சேன், சாதத்தைக் கோழி மாதிரி குதறிண்டிருக்கையே? ஏன், ஒட்டலில் சாப்பிடுகிற மாதிரியில்லையா?”

”அதெல்லாம் ஒண்ணுமில்லை அம்மா!”

ன்னமோ அப்பா, நாளைக்கு வண்டி ஏறும் சமயம் எதையாவது வரவழைச்சுண்டு நிக்காதே! உங்கப்பா என் உசிரைப் பிடுங்கியெடுத்துடுவார். ’பிள்ளைப் பாசம் உனக்குத்தான்னு பண்ணிப் பண்ணி வயத்தில் தனியா வெச்சி அடைச்சயா’ ன்னு.”

“ஒண்ணுமில்லேம்மா...”

என் தொண்டையுள் குண்டலங்கள் மாட்டிக் கொண்டிருக்கின்றன.


நேற்றுப் போனவள் இன்றும் போனதால், போனவள் வருவாள் என்று அவள் வருகையை எதிர்பார்த்து மாலை வண்டிக்குக் காத்திருக்கிறேன்.

வானத்தில் மேகப் பாறைகள் அடைத்துக் கொண்டிருக்கின்றன. மரங்களில் இலை அசையவில்லை. வேர்வையில் மயிர் நனைந்து நெற்றிப் பொட்டில் பிசுக்கென்று ஒட்டிக் கொள்கிறது. மூச்சு திணறுகிறது.

ராந்தல் கம்பத்தின் உச்சியை எட்ட ஒரு வண்டு எகிறி எகிறித் தோற்று, சொத்துச் சொத்தெனத் தரைமேல் விழுகின்றது. விழும் சப்தம் அருவருப்பாயிருக்கிறது. ஒரோரு சமயமும் வீழ்ந்த அதிர்ச்சியின் மூர்ச்சை தெளிய நேரம் ஆயிற்று. ஆயினும் அதன் துள்ளல் ஓயவில்லை.

நீ வாத்தியாரா? நர்ஸா? வேறு எந்த உத்தியோகம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/51&oldid=1287240" இலிருந்து மீள்விக்கப்பட்டது