பக்கம்:அலைகள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52 இ லா. ச. ராமாமிருதம்
 

 வானத்தில் பாறைகள் உடைந்துவிட்டன. காற்று எழும்பி, மரங்களில் சீறுகின்றது. மின்மினிகள் புதருக்குப் புதர் மினுக்கின்றன.

அறுந்த நகைபோல் வானில் மணிகள் சிதறி, வாரியிறைந்து, குற்றுயிரில் ஒளிமூச்சு விட்டபடி கிடக்கின்றன.

பாச்சையினத்தின் பூச்சியொன்றின் ரீங்காரம், நள்ளிரவில் மோஹினியின் கால் சலங்கைபோல் கிண்கிணிக்கிறது.

தலையை இரு கைகளிலும் தாங்கிக்கொண்டு வேப்ப மரத்தடிப் பெஞ்சின்மேல் குன்றுகிறேன். நீ வந்ததையும் வராததையும் அறியேன். ஆனால் நேற்றுப் போனாய், நாளை போவையோ? அல்லது விடுமுறை கொள்வாயோ? என் விடுமுறை முடிந்து நாளை நான் திரும்புகிறேன்.

தண்ணீரும் மூன்று முறை பார்க்குமென்பார்கள். நான் உன்னில் மூழ்கிவிடுவேனோ? அல்லது மூழ்கியேவிட்டேனோ?

சொல்வோருக்குக் கேட்போரைப் பற்றிக் கவலையில்லை. சொல்வோருக்குச் சொல்லச் சொல்ல அலுப்புமில்லை.

இரவெல்லாம் அம்மா வயிற்றுக்குப் புத்தி சொல்வி மாளவில்லை. "நீ ஒட்டலில் சாப்பிடறே. இதைத் தின்னு, அதைத் தின்காதே; எண்ணெய் முறை மறக்காதே. கஷாயம் போட்டுக்கொடுக்க ஆளில்லாவிட்டாலும் ஒரு முட்டை விளக்கெண்ணெயைப் படுக்கப் போகுமுன் விட்டுக்கோ-"

இன்னும் இதுமாதிரி எத்தனையோ புத்திமதிகள்.

இப்போ அப்பா முறை, வண்டி கிளம்பும்வரை ஓயாது. "உன்னைத் தனியாக விட்டிருக்கிறது. உன்னைப் பக்கத்திலிருந்து பாதுகாக்கவேண்டிய பருவம். ஆனால் குடும்ப நிலைமை ஒண்னு ஒண்னு எப்படி எப்படியோ இருக்கிறது. உன் வயதில் எனக்குச் சொல்வோர் யாருமில்லை. எல்லாத்தையும் நானே தடுக்கிவிழுந்து பட்டுப்பட்டுத் தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/54&oldid=1139033" இருந்து மீள்விக்கப்பட்டது