பக்கம்:அலைகள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குண்டலி இ 55

வண்டியின் தாளம் போட்ட அசைவில் குண்டலங்கள் கன்னங்களில் இடித்து நர்த்தனமாடுகின்றன. அவள் நெஞ்சுக் குழியில் அடிக்கும் நரம்பில் பதிந்துவிட்ட என் கண்களை எடுக்க முடியவில்லை. அங்கு துடிப்பது என் உயிரா? அல்ல எவ்வுயிரும் ஒருயிராய்ப் பொதுவான ஒன்றன் உயிரா?

அடுத்த ஸ்டேஷனில் அவள் இறங்கினாள். அப்புறம் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பிளாட்பாரத் தில் நெறிந்த கூட்டத்தில் கலந்து போனாள்.

குண்டலி !


அறையுள் டெலிபோன் மணி அடித்தது, உள்ளே சென்றேன். டெலிபோனை எடுத்தேன். பக்கத்து ஸ்டே வுனிலிருந்து குரல் வந்தது.

“என்ன, வண்டியை விடலாமா? என்ன பேச்சுமூச்சு காணோம்? காது கேட்கிறதாயில்லையா? இல்லை, வாயில் கொழுக்கட்டையா?”

எங்கோ நினைவாய், “ அதான் தலையை ஆட்டி னேனே! என்றேன்.

‘அதுதான் சரி, ரொம்ப சரி! அப்பாவுக்கேற்ற பிள்ளை நீதாண்டா: வெடுக்கென டெலிபோனைக் கொக்கியில் மாட்டிய சப்தம் காதை குடைந்தது.

அவருக்கு அப்பாவைத் தெரியும். அவர் ஜாம்பவான் நான் உள்ளங்கை அடிமேட்டில் கண்களைக் கசக்கிக் கொண்டேன். இமையுள் குண்டலங்களின் அடிச் சதங்கை மணிகள் அறுந்து தாறுமாறாய் மின்னி அறுத்தன.

கண் திறந்ததும் எதிரே என் மனைவி நின்றிருந்தாள். அவள் கைகள் முஷ்டித்திருந்தன. உள்வலியில் புருவங்கள் தெறிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/57&oldid=667194" இருந்து மீள்விக்கப்பட்டது