பக்கம்:அலைகள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குண்டலி இ 57

‘எனக்குந்தான் தெரியவில்லை. நீங்கள்தான் சொல் லுங்கோளேன்: கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள். பார்க்கப் பரிதாபமாயிருந்தது. ஏன் இப்படி மாட்டிக் கொள்கிறோம்?

“சொல்லவோ செய்யவோ என்ன இருக்கிறது? வயிற் முப்பாடில் மாட்டிக்கொண்ட பிறகு வருவதை வந்தபடி ஏற்பது தவிர!”

‘இதுதான் உங்கள் பதிலா?”

நான் வேறு பேசவில்லை. இவளோடு எவன் பேசு வான்? இந்த நிமிஷத்துக்கு இவளையே எங்கேயோ எப்பவோ பார்த்த மாதிரிதான் இருந்தது.

அவள் உதடுகள் நடுங்கின. மரணத் தீர்ப்பு கேட்ட கைதிபோல் அவள் முகத்தில் அவயவங்கள் விண்டன. அப் படியே மேஜைமேல் சாய்ந்தாள். முழங்கை வளைவுள் முகம் கவிழ்ந்தது.

நான் தேற்ற முன்வரவில்லை. இப்போது அவள்மேல் எனக்கு இரக்கம்கூட வரவில்லை. அழு, அழு, நன்றாய் அழு. அலுப்பு உனக்கு மாத்திரம்தானோ? எனக்கில்லையா?”

வண்டி கிளம்பியாகிவிட்டது. மேட்டிலிருந்து பள்ளத் தில் இறங்குகையில் சரியும் சப்தம் தூரத்திலிருந்து எட்டு கிறது.

புத்தகங்களில் செய்யவேண்டிய பதிவுகளைச் செய் தேன்.

அகமுடையான் அடித்தாற்போல் பிழியப் பிழிய அழறாலோ, யாராவது வந்தால்?

அந்தக் கவலையே வேண்டாம். அநேகமாய் அடுத்த வருஷத்துக்குள் இந்த ஸ்டேஷனை எடுத்துவிடுவார்கள் என்றே நினைக்கிறேன். எடுத்துவிடட்டும். எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/59&oldid=667197" இருந்து மீள்விக்கப்பட்டது