பக்கம்:அலைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கடல்


ந்தத் தொகுதியின் தலைப்பை தனதாய் தாங்கிய 'அலைகள்' சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னால் 'கங்கை' பத்திரிகையில் வெளிவந்தது. ஆனால் தொகுதிக்குத் தலைப்பை நிச்சயித்தபின், தலைப்புக் கதை எங்கு தேடியும் அகப்படவில்லை. அதிர்ஷ்டவசமாக கதையின் மூலப் பிரதியை-முதன் முதலாக உருவாகும் அதன் அத்தனை அடித்தல் திருத்தல்களின் ரணகளத்துடன்-சுருட்டிக் கட்டி எங்கேயோ ஒரு ஜாதிக்காய்ப் பெட்டிக்கடியில் போட்டு வைத்திருந்த ஞாபகம் வந்தது. அதன் மேல் இத்தனை வருடங்களில் சேர்ந்த மற்ற குப்பைகளின் அடியிலிருந்து தோண்டி எடுத்து, திருப்பி எழுதினேன்.

அப்படி எழுதுகையில், அந்தப் பின்புலனில் எனக்குக் கூடவே தோன்றிய சில எண்ணங்களை-தோற்றங்களை என்று சொன்னால் கூட மிகையாகாது- இங்கு வெளிப்படுத்துவது பொருந்தும்.

நான் ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் சென்னையைவிட்டு அதிகம் வெளியே போனது கிடையாது.

எங்கள் குடும்பம் கிட்டதட்ட அறுபது வருடங்களாய், நான் பிறப்பதற்கு முன்பே கூட, சென்னையிலேயே வாசம்.

சென்னைவாசிக்கு ஒரு அரும்பெரும் வாய்ப்பு சென்னை கடற்கரை. நான் சிறியவனாய் இருக்கையில் மாலையில்

அ.—1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/7&oldid=1298495" இலிருந்து மீள்விக்கப்பட்டது