பக்கம்:அலைகள்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முள்

 ரு திருப்புத்தான் திருப்பியிருப்பேன்; அது இரண்டு தடவை திருகினால்தான் திறக்கும் பூட்டு. மேலிருந்து அவர் குரலின் அவசரம்-இல்லை, அதன் மெலினமான ஈர்ப்பு என்னை எட்டிற்று. சாவியைப் பூட்டிலேயே விட்டுவிட்டு, விடுவிடெனப் படிகள்மேல் தத்தி ஓடுகையில், சிறுவயதில் ஆடிய கயிறு விளையாட்டு ஞாபகம் வந்தது. ‘'ஸ்கிப் ஸ்கிப்...ஸ்கிப்" படிக்கட்டு S வடிவத்தில் இருமுறை வளைந்துதான் பிறகு நேராய் மாடிக்கு ஒடிற்று.

ராத்திரி எப்போது மழை பெய்தது? மழையென்று பொழியல் இல்லை; பூமி நனைந்த லேசான தூறல், முகம் துடைத்த குழந்தைகள்போல் மரங்களின் இலைப்பச்சை பளிச்சென்று ஆனால், தனிப்பூச்சாய்த் தெரியாமல் பின்னணியில் வேளையின் மந்தாரத்துடன் ஒவ்வி இழைந்தது.

அவர் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தார். தலையணைமேல் நான் போட்ட இடத்தில் புஷ்பம் அப்படியே கிடந்தது. . .

என் வருகையை அறிந்தாரேனும் அவர் நிமிர்ந்து பார்க்கவில்லை. கவனம் தன் வலது கைமேல் ஆழ்ந்திருந்தது.

“என்ன?" என்று கேட்டுக் கொண்டே, அருகில் அமர்ந்தேன். கையை நீட்டினார். சுட்டுவிரலில் சொட்டுச் சிவப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/74&oldid=1142476" இருந்து மீள்விக்கப்பட்டது