பக்கம்:அலைகள்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முள் இ 75

சுக்கு வருகிறேன் என்று நினைக்க வேண்டாம்; உங்களை உஷார்ப்படுத்துகிறேன்; அவ்வளவுதான்!’

“அப்போ எனக்கு அப்பாமேல் எவ்வளவு கோவம், கோவமா வந்தது தெரியுமா? என்னதான் தாலி கட்டி என்னை உங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகிறீர் கள் என்றாலும். நீங்களும் நாங்களும் இனிமேல்தானே பழகிப் புரிந்துகொள்ளணும்! என்னைப்பற்றி இப்படி மனசில் புகுத்தினால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? என்னவோ கரைஞ்சு கரைஞ்சு போயிடுவேனாம், இவாதான் வழிச்சு வழிச்சு குண்டானில் ஏந்தின மாதிரி!

‘ஆனால் அப்பாவே அப்படித்தான். யாரிடம் எந்த மட்டும் என்ற எல்லையே கிடையாது. தான் ஏதாவது வேடிக்கையாய்ப் பேசி, எதிராளி சிரிச்சுட்டால் போதும், தலை காலே தெரியாது.

‘ஆனால் அப்பாவுக்கு நிஜமாகவே இப்போ அப்பா டான்னு இருந்திருக்கும். வெய்யிலோ மழையோ அஞ்சில் ஒண்ணு குறைஞ்சால், அந்த மட்டுக்கும் சுமை சுளுவுதானே? அதுவும் தன் நிலையில், பிள்ளையார் பிடிக்க மஞ்சளுக்குக் கூடச் செலவு வைக்காமல் மாப்பிள்ளை கிடைத்தது கொள்ளை அதிர்ஷ்டமில்லையா?

“என் வாயை நீங்கள் பொத்தினாலும் என் உதடுகள் பிடிவாதமாய் உங்கள் விரலடியில் அசையத்தான் அசையும். சொல்லத் தான் சொல்வேன். ஆனால் நான் அசடுதான். என் பொன் அதிருஷ்டம் என்னெதிரில் இமயமாய் நிற்கை யில், அப்பாவின் ராசியைப்பற்றி நான் ஏன் பேசிக்கொண். டிருக்கிறேன்? என்னைப் பெற்றவர் என்று தவிர, இனி அப்பாவைப் பற்றி எனக்கென்ன? திடீர் திடீரென நன்றி அலைமோதி நெஞ்சுவரை எழுகையில் எப்படித் தெரிவிப்ப தென்றே தெரியவில்லை.”

சொல்விக்கொண்டிருக்கையிலேயே நெஞ்சையடைத் தது. கண்கள் கலங்கின. அவர் கைகளையிழுத்து அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/77&oldid=667235" இருந்து மீள்விக்கப்பட்டது