பக்கம்:அலைகள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76 இ லா. ச. ராமாமிருதம்

களின் கிண்ணத்தில் என் முகத்தைப் புதைத்துக்கொண் டேன்.

அவர் கைகள் விடுவித்துக்கொள்ள முயன்றன. அவர் முகத்தில் புன்னகை மறைந்தது. என் உணர்ச்சிப்பெருக்கோ, நான் சொன்னதில் எதுவோ அவருக்குப் பிடிக்கவில்லை,

“என் மேல் கோபமா? தப்பு ஏதேனும் பண்ணிவிட் டேனா? அப்படியே என்மேல் தப்பு இருந்தாலும் முதலில் என்னை மன்னித்து விட்டதாய்ச் சொல்லுங்கள். பிறகு என் தப்பு என்னவென்று சொல்லுங்கள். எது? இந்தப் பூவா? இதன் முள்ளா?”

சிரிப்பு மறுபடியும் உதட்டோரங்களில் தோன்றி ஒளி விசிற்று.

“அப்படியானால் தப்பு என்மேல் ஒண்னுமில்லையா? உங்கள் சிரிப்பு கலங்கரைவிளக்குப்போல், சுழற்சியில் மறைந்த சமயம் கண்டு நான் மிரண்டதுதானா? நீங்கள் சிரித்தால் என்னுள் வெளிச்சம் எப்படி வீசறது, தெரியுமா? அதன் நிறம் முதல் கொண்டு எனக்குத் தெரியும் ஒரு தினு: சான ஊதா கலந்த நீலம்! என்ன, சிசிப்புப் பரவுகிறது: என்ன இந்தப் பெண் இப்படி அக்கேபிக்கேன்னு இருக்கு என்றா?

“அட, இருந்துTட்டுப் போறேன். உங்களிடம்தானே! என்று வைத்துக்கொள்ளுங்கள்: உண்மையின் நிஜ உரு. வமே அக்கேபிக்கே தான். உண்மையைத் திரட்டி உருட்டி உருண்டையாய் ஏந்தி, இந்தா இதுதான் உண்மை என்று கையில் கொடுத்துவிட முடியாது. அப்படியே வழங்கி னாலும், அந்த உண்மை உண்மையான உண்மையல்ல. உண்மை வெண்மையாய் இருக்கலாம்; ஆனால் உருட்டின அந்த உருவில் அது அசல் இல்லை. இந்த “அக்கேபிக்கே” நிலையில்தான் அது உண்மை.

உங்களுக்குக் கேலியாயிருக்கும்; இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் என்று என்னைக் கேட்டால் எனக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/78&oldid=667236" இருந்து மீள்விக்கப்பட்டது