பக்கம்:அலைகள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முள் இ 77
 

 தெரியாது. தெரிந்தால் நான் கெட்டிக்காரியாகி விடுவேன்! நான் கெட்டிக்காரியான பிறகு, உண்மையாயிருக்க முடியாது. தோன்றியதைத் தோன்றினபடி, தோன்றின உடனே எங்களிடம் மாற்றி, பொருளும் அதன் எடையுமாய், நீங்கள் நிறுத்திக்கொள்ள, என்னையும் உங்களிடம் ஒப்படைத்துக் கொள்வதில்தான் என் உண்மை இருக்கிறது. என்ன, மூக்கில் விரலை வைக்கிறேள்? இது லெக்சர் இல்லை. வெள்ளம் வருகிறது. மதகின் கதவுகள் திறந்து விட்டன. அவ்வளவுதான்.

“என் அக்கேபிக்கேயை முழுக்கத் தெரிந்துகொண்டு விடுங்கள். இந்தப் பூ எங்கிருந்து வந்தது தெரியுமா? நமக்குக் கலியாணம் ஆகி, ஊருக்குக் கிளம்பிய மூட்டையோடு இதன் செடியையும் சேர்த்துக் கட்டினேன். எனக்கே பூமேல் கொஞ்சம் அசடு உண்டு. இதன்மேல் ‘பித்துக்' கூட.

‘இங்கு வந்ததும், நள்ளிரவில் எழுந்து- இருட்டுக்கு எனக்குப் பயம் கிடையாது- இதை நடுவது தெரியக் கூடாதாம். அது முளைப்பதில் அவ்வளவு மானியாம்-அப்படி ஒரு தோட்டக்காரக் கிழவன், எங்கள் ஊரிலே எனக்குச் சொன்னான்- தோட்டத்தில் மதிலோரத்தில் உங்கள் தோட்டத்தில் உங்களுக்குத் தெரியாத இடம் உண்டா, இருக்கலாமா? இருந்தும் உங்களுக்கு மறைவான இடம் என்று நான் நினைத்துக் கொண்ட இடத்தில் நட்டேன்".

"காத்திருந்தேன்".

"குபீர்" என்ற இதன் மணத்தில்தான் தட்டி எழுப்பினால்போல் எனக்கு விழிப்பு வந்தது. கூடவே சேவலும் கூவிற்று. எழுந்துபோய்-இருட்டுக்கு எனக்குப் பயம் கிடையாது-பறித்து வந்து உங்கள்,அருகே தலையணைமேல் வைத்தேன். இம்முதல் பூவாலன்றி வேறெவ்விதம் என் நன்றியைத் தெரிவிப்பேன்? இன்று தீபாவளி பார்த்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/79&oldid=1142981" இருந்து மீள்விக்கப்பட்டது