பக்கம்:அலைகள்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


78 இ லா. ச. ராமாமிருதம்

ஆத்திருப்பதே எனக்குத் தனி அர்த்தமாய் விளங்குகிறது. ஆனால், உங்களுக்குச் சொல்லவில்லை.

‘ஏன் முகம் மறுபடியும் மாறிவிட்டது? கண்கள் ஏன் விசனமாகிவிட்டன! உங்களுக்குக் கண்கள் நிஜமாகவே நல்ல அழகு. பெரிதாய், ஏரிகள்போல்! நாள் முழுவதும் உங்கள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கு அலுக்கவே அலுக்காது. உங்கள் கண்கள்தான் என் கண்ணாடி மறுபடியும் உங்களுக்குப் பிடிக்காதது என்ன பேசிவிட்டேன்? சொல்லுங்கோளேன்! ஆனால், சொல்லு முன் என்னை மன்னித்துவிட்டேன் கான்று முதலில் சொல்லி, என் தப்பு என்னவென்று பிறகு சொல்லுங்கள். உங்கள் கண் களின் வருத்தத்தை சகித்துக்கொள்ளும் மனஸ் எனக் கில்லை. இந்தச் சமயத்தில் அப்பா சொன்னது வாஸ்தவ மாய் இருந்தாலும் இருந்துவிடட்டும்.

  • சொல்ல மாட்டேஸ்?”
  • * * * .

‘'நான்தானப்பா ந ம ஸ் கார ம் பண்ணுகிறேன். இதானே கிழக்கு? பாரு, நான் எவ்வளவு அசடு: நாம்தான் மாறிட்டோம்னா திசைகூட மாறிடுமா? வீடு இதுதானே? வீடு மாறினால்தானே திசைமாறும்! ஆனால் நான் திசை திரும்பி விட்டேன் அப்பா!

“என்னப்பா பேந்தப் பேந்த முழிக்கறேள்? உன்னை மன்னிப்புக் கேட்கிறேன், அப்பா! இதுக்குமேல் பதவிசாய் எனக்கு வராது காலைப் பிடித்துக்கொண்டு கதற வில்லையே என்கிறாயா? நீ என்னை அப்படி வளர்க்க வில்லை. அதனால் அதற்கும் காரணம் நீதான்.”

என்ன விமலா, மூச்சேவிடாமல் நீயே பேசிக்கொண்டே போனால்... எனக்கும் நடுவில் ஒரு வார்த்தைக்காவது இடம் வேண்டாமா? என்ன சார். எப்படியிருக்கிறீர்கள். செளக் sulom ? Hearty Congratulations-"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/80&oldid=667242" இருந்து மீள்விக்கப்பட்டது